உள்ளடக்கத்துக்குச் செல்

நாவாந்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவாந்துறை

நாவாந்துறை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°40′40″N 79°59′56″E / 9.677745°N 79.998851°E / 9.677745; 79.998851
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

நாவாந்துறை என்பது இலங்கையின், யாழ்ப்பாண நகருக்குள் அடங்கிய ஒரு இடமாகும். இது யாழ்ப்பாண நகர மத்தியிலிருந்து வடமேற்குத் திசையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் 23 வட்டாரப் பிரிவுகளுள் ஒன்றாக நாவாந்துறையும் உள்ளது. நாவாந்துறை என்ற பெயர் நாவாய், துறை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையில் தோன்றியது. நாவாய் என்பது ஒரு வகைக் கடற் கலம். நாவாய்கள் கரைக்கு வந்து செல்லும் சிறிய துறைமுகமாக இருந்த காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு வாழும் மக்களில் பலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். 9°40′39.98″N 79°59′55.86″E / 9.6777722°N 79.9988500°E / 9.6777722; 79.9988500

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவாந்துறை&oldid=2652035" இலிருந்து மீள்விக்கப்பட்டது