நாவற்குழி
நாவற்குழி | |
|---|---|
| ஆள்கூறுகள்: 9°39′0″N 80°05′0″E / 9.65000°N 80.08333°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | வடக்கு |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பி.செ.பிரிவு | தென்மராட்சி |




நாவற்குழி (Navatkuli)[1][2] என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். தெற்கே இருந்து யாழ்ப்பாண நகருக்குச் செல்கையில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற நுழைவுப் பாலமும் இக்கிராமத்திலேயே உள்ளது. சிவபூமி திருவாசக அரண்மனை, சிவபூமி யாழ்ப்பாண அருங்காட்சியகம் என்பவையும் இக்கிராமத்திற்குப் புகழ் சேர்க்கும் அடையாளங்களாக உள்ளன.
நாவற்குழி தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் பின்வரும் மூன்று கிராமச் சேவையாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளன: நாவற்குழி மேற்கு, நாவற்குழி கிழக்கு, கைதடி நாவற்குழி.[3]
மக்கள்தொகை
[தொகு]2007 இல் மக்கள் தொகை: நாவற்குழி மேற்கில் 1,362 (652 ஆண்கள், 710 பெண்கள்); நாவற்குழி கிழக்கில் 1,060 (484 ஆண்கள், 576 பெண்கள்), கைதடி நாவற்குழியில் 810 (398 ஆண்கள், 412 பெண்கள்). நாவற்குழி கிழக்கு மற்றும் கைதடி நாவற்குழியின் முழு மக்கள்தொகையும், நாவற்குழி மேற்கில் 216 பேரைத் தவிர மற்ற அனைவரும், இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக அந்த நேரத்தில் இடம்பெயர்ந்தனர்.[3]
அமைவிடம்
[தொகு]யாழ்ப்பாண நகரில் இருந்து கண்டி வீதி வழியே ஆறு கிலோமீட்டர் தூரத்தில் நாவற்குழி உள்ளது. யாழ் நகரையும் நாவற்குழியூரையும் பிரிக்கும் எல்லை வரவேற்பு வளைவு மூலம் காட்டப்பட்டுள்ளது. கண்டி வீதியின் சிறு வளைவொன்று வடக்குப்பக்கம் திரும்புகிறது. இவ்விடம் நாவற்குழிச் சந்தி என்று கூறப்படுகிறது. இது சாவங்கோட்டை என்றும் அழைக்கப்பட்டது. 13-ஆம் நூற்றாண்டில் சந்திரபானு என்னும் சாவுகமன்னன் யாழ்ப்பாண குடாநாடு, வன்னிப்பிரதேசம், திருகோணமலை ஆகிய இடங்களை ஆட்சி செய்தான் என வரலாறு கூறுகின்றது.[4]

சாவங்கோட்டை என்றும் பெயர் பெற்றுள்ள இச்சந்தியில் யாழ்ப்பாணம் செல்லும் வீதி, கண்டி வீதி, கேரதீவு வீதி, புகையிரத வீதி ஆகிய நான்கு சாலைகள் சந்திக்கின்றன.[5]

தொடருந்து நிலையத்திற்குத் தென்பகுதியில் வீட்டுத்திட்டம் மூலம் கட்டப்பட்ட பெருந்தொகையான வீடுகளைக் காணமுடியும். இவ்வீட்டுத்திட்டத்தின் மேற்கு, தெற்கு எல்லைகளாக உப்பளங்கழியும் கிழக்கெல்லையாகச் செம்பாட்டுத் தோட்டவெளியும் வடக்கே புகையிரதப் பாதையும் அமைந்துள்ளது. மேற்கெல்லையாக உப்பளங்கழிக்கு மேலாகப் புகையிரதப் பகுதியினரால் இரும்புப்பாலம் ஒன்று புகையிரதப்பாதை அமைக்கப்பட்ட ஆரம்ப நாள்களில் இருந்து காணப்படுகின்றது. இந்த இடத்தை "ஆனைவிழுந்தான் பாழி " எனக் கூறுவர்.[6][7]


வணக்கத் தலங்கள்
[தொகு]- சித்தி விநாயகர் ஆலயம்
- நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவில்
- வேலம்பிராய் கண்ணகை அம்மன் ஆலயம்
- நாவற்குழி புனித அந்தோனியார் தேவாலயம்
ஆளுமைகள்
[தொகு]- சி. ஜே. எலியேசர், கணிதப் பேராசிரியர்
- கவிஞர் அம்பி
- நாவற்குழியூர் நடராசன், எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர்
- சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை, எழுத்தாளர்
பாடசாலைகள்
[தொகு]- நாவற்குழி மகா வித்தியாலயம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cuṇṭik-kuḻi, Āmaik-kuḻi, Tāmarak-kuliya, Mudalak-kuliya". TamilNet. June 19, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22507.
- ↑ "Maddakka'lappu / Batticaloa". TamilNet. March 19, 2009. https://www.tamilnet.com/art.html?artid=28599&catid=98.
- ↑ 3.0 3.1 Basic Population Information on Jaffna District - 2007. Colombo: Department of Census and Statistics (Preliminary Report, Based on Special Information). June 2008. pp. 29, 40. Retrieved 21 July 2020.
- ↑ யாழ்ப்பாண இராச்சியம் பக்கம் 31 பதிப்பாசிரியர் – கலாநிதி .சி .க .சிற்றம்பலம்
- ↑ "புகையிரதநிலையம்". myliddy.com. Retrieved 2022-11-01.
- ↑ "Aanai-vizhunthaan-ku’lam, Aliyaa-wætuna-wæwa". TamilNet. April 5, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36197.
- ↑ "Kompan Chaayntha Ku'lam". TamilNet. December 14, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=27683.