நால்வகை ஊழியெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணிக்கைகளை எண் என்கிறோம். தமிழ் உலகம் (தமிழ்மொழி) எண்ணிக்கையை 4 கோணங்களில் பார்த்திருக்கிறது. கடுவன் இள எயினனார் என்னும் புலவர் இறைவன் திருமாலைப் பாடியுள்ள பரிபாட்டில் (3-77முதல்) திருமாலின் பல பெருமைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அவன் நால்வகை ஊழியெண்களாய் அவன் நவிலப்படுவது.
1 பாழ்

2 கால்
3 பாகு
4 ஒன்று, இரண்டு, ... என்றெல்லாம் எண்ணிக்கொண்டு செல்லும் பாங்கு.
பாழ் = 0
கால் = 0.25
பாகு = 0.5
1, 2, ... என்று எண்ணிக்கொண்டே செல்லும் முடிவில்லாத பாங்கு.

இதனை அறிவியல் கோணத்திலும் எண்ணிப்பார்க்க முடியும்.
1 வெம்மை அடங்கிக் கிடக்கும் பாழ்நிலை (விண்) ஊழி
2 விண் வெடித்து ஓடும் காற்றுஊழி
3 கால் வெம்மையும் தண்மையுமாய்ப் பாகுபட்ட ஊழி (தீ, நீர்)
4 எண்ணிக்கை உருவம் கொண்ட நிலை

'பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என | இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, | ஆறு என, ஏழ் என, எட்டு என, தொண்டு என | நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை'

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நால்வகை_ஊழியெண்&oldid=2882790" இலிருந்து மீள்விக்கப்பட்டது