நாலூர் அமிர்தகலச நாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாலூர் அமிர்தகலச நாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். தூங்கானை மாடம் அமைந்த நிலையில் மாடக்கோயில் வகையைச் சார்ந்த கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணம் வட்டம் கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள திருச்சேறைக்குத் தென்கிழக்கில் 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1] இத்தலத்தை சூலமங்கை என்றும் அழைப்பர்.

இறைவன்[தொகு]

இங்குள்ள இறைவன் அமிர்தகலசநாதர் ஆவார். இவர் பலாசவனநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவி பெரியநாயகி.[1]

சிறப்பு[தொகு]

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014