உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் விளக்கவுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாலடியார் விளக்கவுரை என்பது ‘நாலடியார் உரைவளம்’ என்னும் நூலில் மூன்றாவதாக அமைந்துள்ள உரை. இதனை இயற்றியவர் இன்னார் எனத் தெரியாத காரணத்தால் இந்த உரையை விளக்கவுரை எனக் குறிப்பிட்டுள்ளனர். பதுமனார், தருமர் ஆகியோர் உரைகளை இவ்வுரை அப்படியே எடுத்தாள்கிறது. சில இடங்களில் புதிய விளக்கங்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவ்வுரை எடுத்தாள்வதை எண்ணும்போது இவ்வுரை எழுதிய ஆசிரியர் அவ்விருவரின் மாணாக்கராக இருந்திருக்கலாம் எனக் கருதலாம். உரை நூலின் காலம் 13 ஆம் நூற்றாண்டு

புதிய விளக்கங்கள்

  • சோறு புலி உகிர் போறல் – இடை முரிந்து மாறாது அங்கவீனப் படாது இருமருங்கும் நேரிதாய் நின்று தண்டு அற வெந்து உத்தம இலக்கணத்தோடும் பீலிமுருந்து மயில் தோகையின் வெண்தண்டு என்றும் முசியா அரிசி என்றும் சொல்லப்பட்டு புலியுகிர் போலப் பிடித்தால் உள்ளடங்கிவிட்டால் தனித்தனியாதல் [1]
  • வாளாடு கூத்தியர் கண் – வாளை நெற்றியின் நோக்கிக் கூத்து இயற்றுவார் கண் போலப் சபையும் தானமும் பகையும் நிலமும் பார்க்குமது போல [2]
  • உறுபுலி தேரை பற்றியும் தின்னும் – ஒருநாள் ஒருநாழிகை இதற்கும் பசிநோய் பொறாமல் உச்சிராயத்தினால் பனியானைத் தின்று அச்சத்தி கொண்டு விருகம் பிடிக்கப்பண்ணும்.[3]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் (நாலடியார் 206)
  2. (வாளின்மேல் நின்று கூத்தாடும் மகளிர் கண் சபை, தானம், பகை, நிலம் ஆகியவற்றைப் பார்த்தவண்ணம் ஆடுவது போல முயலும்போது கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டுமாம். வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
    தாளாளர்க்கு உண்டோ தவறு? (நாலடியார் 191)
  3. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
    சிறுதேரை பற்றியும் தின்னும்; (நாலடியார் 193)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாலடியார்_விளக்கவுரை&oldid=1522721" இலிருந்து மீள்விக்கப்பட்டது