நாற்றாங்கால் நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழமையான நாற்றாங்கல் முறையை பின்பற்றுவதால் மெல்லிய நாற்றுக்கள் அதிகமாக சேதமடைவுடன், நாற்றுக்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் வேர் வளர்ச்சி குறைவதால் நடவு வயலில் நடவு செய்யும்போது அதிக எண்ணிக்கையிலான நாற்றுக்கள் அழிந்து விடுகின்றன. இதனால் நாற்று உற்பத்திக்கான செலவு கூடுவதுடன் வருவாய் குறைகிறது. இதன் குறைகளை களையும் பொருட்டு நவின நாற்றாங்கல் முறையைப் பின்பற்ற வேண்டும்.

நாற்றாங்கல்[தொகு]

பயிர்பெருக்கம் செய்ய வேண்டிய பயிர்களின் இளம் செடிகளுக்கு நாற்றுக்கள் என்றம் நாற்றுக்களைப் பராமரிக்கும் இடத்திற்கு நாற்றாங்கால் என்று பெயர். நாற்று உற்பத்தின் போது பயிர் இரகம், விதையின் தரம், உபரகங்கள், நிலவும் தட்ப வெப்ப நிலை மற்றும் சந்தை நிலவரம் ஆகியவற்றை கருத்தில் கெண்டு செயல்படுதல் வேண்டும்.

நாற்றங்காலின் குறிக்கோள்[தொகு]

  • தரமான தூய்மையான ஆரோக்கியமான நாற்றாங்களை தேவையான அளவில் தயார் சேய்ய வேண்டும்.
  • புதிய இரகங்களைத் தோற்றுவித்தல், தொழில்நட்ப வளர்ச்சி, பூச்சிநோய் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
  • விதை புதிய இரகம் மற்றம் நாற்றுகள் ஆகியவை பற்றிய விவரங்களைப் பரப்புதல்
  • முறையான நேர்த்தி மற்றும் விநியோகம் மூலம் ஏற்றுமதியை ஊக்குவித்தல்
  • நோயற்ற நாற்று வங்கிகளை தோற்றுவித்தல்
  • அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்புகளின் மூலம் தர நிர்ணயம் செய்தல்

நாற்றங்கால் தயாரித்தல்[தொகு]

நாற்றங்கால் உருவாக்கம், தட்ப வெப்பநிலை, மண் வகை, மண்ணின் கார அமிலத்தன்மை, இருப்பிடம், நீர்பாசனம், தகவல் பரிமாற்ற வசதி, சந்தைத் தேவை, தாயாதி தாவரம், திறமையான வேலையாட்கள் ஆகிய காரணிகளைப் பொருத்தே அமைக்க வேண்டும். நாற்றங்கால் உருவாக்கும் அதே நேரத்தில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்பட வேண்டும்.

நாற்றுவகைத் தேர்வு[தொகு]

இது சந்தை மற்றம் நாற்றாங்கால் உள்ள பகுதியின் தேவையைப் பொருத்து மாறுபடும் மர மற்றும் பழப்பயிர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் தோட்டப் பயிர்களுக்கான நாற்றங்காலும், காய்களிகள் அதிகம் விளையும் பகுதிகளில் காய்களிகளுக்கான நாற்றங்காலும், நிழல் விரும்பும் தாவரங்கள் மற்றும் அழகுத் தாவரங்கள் தேவைப்படும்இடங்களில் அதற்குரிய நாற்றங்காலையும் தேர்வு செய்து உற்பத்தி செய்ய வேண்டும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வேளாண் செயல்முறைகள் - பாடப்புத்தகம் (மேல்நிலை இரண்டாமாண்டு)