நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனம்
நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனம் (Norwegian Forest and Landscape Institute) நார்வே நாட்டில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். நார்வே நாட்டின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சகத்திற்கு நிறுவனரீதியாக கட்டுப்பட்டு இந்நிறுவனம் இயங்குகிறது. இதன் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இந்நிறுவனம் தன்னாட்சி தகுதியைப் பெற்றுள்ளது.[1] இது 1 ஜூலை 2006 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று நார்வே வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நார்வேன் நில இருப்பு நிறுவனம் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. நார்வே வனம் மற்றும் இயற்கை நிறுவனத்தின் தலைமையகம் விகென் மாகாணத்தில் உள்ளது. பிராந்திய அலுவலகங்கள் நார்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் , நிர்வாக மையமான சிடெய்ங்செர் மற்றும் திரோம்சோ நகரங்களில் உள்ளன.[2]
அர்னே பார்டலன் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.
ஜூன் 30, 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று இந்நிறுவனம் நார்வே உயிரியல் பொருளாதார ஆராய்ச்சி அமைப்புடன் இணைக்கப்பட்டது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Information in English". Norwegian Forest and Landscape Institute. 23 மே 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Norsk institutt for skog og landskap". Store norske leksikon. (2007). Ed. Henriksen, Petter. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 28 May 2009.
- ↑ Universitetet i Bergen. "Norwegian Forest and Landscape Institute - State Administration Database - NSD". NSD Data on the Political System. Universitetet i Bergen. 2018-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2023-02-28 அன்று பார்க்கப்பட்டது.