நார்வே நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நார்வே நாடு மிக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடு ஆகும். நார்வே நாட்டின் 99 விழுக்காடு மின்சாரம் நீர்மின்ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறந்த இயற்கை நீர்வளங்களை கொண்டுள்ளதால் நீர்மின்ஆற்றல் மின் உற்பத்தி, சூரிய ஆற்றல் உற்பத்திக்கான வளங்கள் குறைவாக இருப்பினும் சூரிய மின் ஆற்றல் தர சிலிக்கான் மற்றும் சிலிக்கான் சூரிய மின் ஆற்றல் கடத்துதிறக் கலங்கள் உற்பத்தியில் உலகளவில் மிக அதிக அளவில் ஈடுபட்டுள்ளது. காற்றாலை மின்சார உற்பத்தியும் இங்கு பயன்பாட்டில் உள்ளது. நார்வே அரசின் மூலம் ஒன்பது நீர் திறன் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. உட்செருகு மின்சார மகிழுந்து நார்வே நாட்டில் அதிகஅளவில் பயன்பாட்டில் உள்ளது. புவி மாசுபடுவதை தடுப்பதற்கும் சுத்தமான மின்சார உற்பத்தி செய்வதிலும் இந்நாட்டின் பங்கு பெரிதும் உள்ளது. மேலும் வளர்ந்துவரும் நாடுகளும் தங்கள் நாட்டில் புவி மாசுபடுவதை தடுப்பதற்கும் சுத்தமான மின்சார உற்பத்தி செய்வதற்கும் நார்வே ஒரு முன்னோடியாக திகழ்கிறது[1].

மேற்கோள்கள்[தொகு]