நார்வார்

ஆள்கூறுகள்: 25°19′N 77°58′E / 25.32°N 77.97°E / 25.32; 77.97
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்வார்
நகரம்
அடைபெயர்(கள்): नलपुर
நார்வார் is located in மத்தியப் பிரதேசம்
நார்வார்
நார்வார்
மத்தியப் பிரதேசத்தில் நார்வாரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°19′N 77°58′E / 25.32°N 77.97°E / 25.32; 77.97
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிவபுரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்19,400
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்473880

நார்வார் ( Narwar ) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும் ஒரு பேரூராட்சியுமாகும். வரலாற்றுக் கோட்டை அமைந்துள்ள நார்வார் காளி சிந்து ஆற்றின் கிழக்கே சிவபுரியிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குவாலியர் மாநிலத்தின் காலத்தில் இது நார்வார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பல இடைக்கால சமசுகிருத கல்வெட்டுகளில் இது நளபுரம் (நளனின் நகரம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நார்வார் கோட்டை காளி சிந்து ஆற்றால் சூழப்பட்டுள்ளது. அர்சி அணை, மோகினி சாகர் மற்றும் அடல் சாகர் என மூன்று அணைகள் உள்ளன. தற்போது இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

புராணக்கதைகள்[தொகு]

ஸ்ரீஹர்ஷர் எழுதிய நிஷாத சரிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "நளபுரம்" என்ற நகரத்துடன் நார்வார் அடையாளம் காணப்படுகிறது. நிஷாத இராச்சியத்தின் மன்னன் நளனின் தலைநகரம் நளபுரம் ஆகும். இவனது தமயந்தியின் மீதான காதல் மகாபாரதத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் தமயந்தியை நார்வார் காடுகளில் உறங்கும் போது விட்டுச் சென்றபோது, அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்று வனவிலங்குகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டு சந்தேரியை அடைந்தாள்.[1] [2] :136

வரலாறு[தொகு]

நார்வாரிலிருந்து சந்தேரி வரையிலான காடுகளின் வழியாக ஒப்பீட்டளவில் குறுகிய பாதை 200 கி.மீ அளவில் அமைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் ராஜபுத்திரர்களால் கைப்பற்றப்படும் வரை குவாலியரின் நிறுவனர் மற்றும் ஆட்சியாளர்களாக இருந்த சம்பல் பள்ளத்தாக்கின் நார்வாரியர்களால் இங்கு ஒரு இடைக்கால கோட்டை ஆக்கிரமிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், யச்வபால வம்சம் நார்வாரில் அதன் தலைநகரை நிறுவியது. [3]

1602 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி, அக்பர்நாமாவை எழுதிய அக்பரின் அரசவைத் தலைவரான அபுல் ஃபசல், தக்காணத்திலிருந்து திரும்பி வரும்போது வீர் சிங் தேவ் என்பவர் (பின்னர் ஓர்ச்சாவின் ஆட்சியாளரானார்) சராய் வீர் மற்றும் அந்திரிக்கு இடையே படுகொலை செய்யப்பட்டார். (நர்வார்க்கு அருகில்) அக்பரின் மூத்த மகன் இளவரசர் சலீம் (பின்னர் ஜஹாங்கீர் ஆனார்). [4] திட்டமிட்ட இந்த சதியில் ஈட்பட்டதாக கூறப்படுகிறது. இளவரசர் சலீம் அரியணை ஏறுவதை அபுல் ஃபசல் எதிர்ப்பதாக அறியப்பட்டவர். அவரது துண்டிக்கப்பட்ட தலை அலகாபாத்தில் உள்ள சலீமுக்கு அனுப்பப்பட்டது. அபுல் ஃபசல் அந்திரியில் அடக்கம் செய்யப்பட்டார். [5] [6] அபுல் ஃபசலின் மகன் சேக் அப்சல் கான் (29 திசம்பர் 1571 - 1613) பின்னர் 1608 இல் பீகாரின் ஆளுநராக ஜஹாங்கீரால் நியமிக்கப்பட்டார். [7] 1707 இல், பதவார் சமஸ்தானத்தின் மகாராஜா கோபால் சிங் (1707-1730) 8வது முகலாய பேரரசர் முதலாம் பகதூர் சா என்பவரால் நார்வாலின் பேரரசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். [8] [9]

நிலவியல்[தொகு]

நார்வார்  25.32°N 77.97°E இல் அமைந்துள்ளது. இது சராசரியாக 452 மீட்டர்கள் (1482 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [10] நார்வாரின் மக்கள் தொகை 15,748 என்ற எண்ணிக்கையில் இருந்தது. மக்கள் தொகையில் 53% ஆண்களும் 47% பெண்களும் உள்ளனர். நார்வாரில் சராசரி கல்வியறிவு 58% உள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 45%. நார்வாரில், 18% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சான்றுகள்[தொகு]

  1. The Indian Encyclopaedia. Genesis Publishing. பக். 5079. https://books.google.com/books?id=ncL8Ve9FqNwC&pg=PA5079&dq=Naishadha&q=Naishadha. 
  2. Survey of Sanskrit Literature. Bharatiya Vidya Bhavan. https://www.scribd.com/doc/223739875/Survey-of-Sanskrit-Literature-C-Kunhan-Raja. 
  3. Archaeological Excavations in Central India: Madhya Pradesh and Chhattisgarh. Mittal Publications. பக். 16. https://books.google.com/books?id=o0ISjDDWJwQC&pg=PA16. 
  4. Orchha பரணிடப்பட்டது 7 பெப்ரவரி 2009 at the வந்தவழி இயந்திரம் British Library.
  5. Majumdar, R.C. (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, p. 167
  6. Blochmann, H. (tr.) (1927, reprint 1993) The Ain-I Akbari by Abu'l-Fazl Allami, Vol.I, The Asiatic Society, Calcutta, pp. lxviii–lxix
  7. Blochmann, H. (tr.) (1927, reprint 1993) The Ain-I Akbari by Abu'l-Fazl Allami, Vol.I, The Asiatic Society, Calcutta, pp. lviii–lix
  8. Akhtar, Md. Shakil. "Composition and role of the Nobility (1739-1761)". Md. Shakil Akhtar. https://core.ac.uk/download/pdf/144523653.pdf. 
  9. "Bhadawar Princely state". Abhinay Rathore. https://www.indianrajputs.com/view/bhadawar#:~:text=Umara%2Di%2DUzzam%20Maharaja%20Mahendra%20GOPAL%20SINGH%2C%20Maharaja%20of%20Bhadawar%201707/1730%2C%20he%20was%20appointed%20governor%20of%20Narwar%20in%201707.. 
  10. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்வார்&oldid=3615501" இருந்து மீள்விக்கப்பட்டது