நார்மன் வின்சென்ட் பீலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

        நார்மன் வின்சென்ட் பீலே 1898 மே 31 ல் பவர்ஸ்விலே ஓஹியோ அமெரிக்காவில் பிறந்தார். அவர் அமெரிக்க மந்திரி மற்றும் மிகச் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். அவர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் அதிக அளவு விற்பனையான நூலாகிய "நேர்மறைச் சிந்தனையின் திறன்" என்ற நூலை எழுதினார்.இந்த நூலானது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மனதை ஈர்த்து வாழ்வில் வெற்றி பெற வைத்தது.

நூலின் சிறப்பு[தொகு]

    நேர்மறைச் சிந்தனையின் திறன் என்ற நூலானது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பெற வேண்டிய வெற்றிகள், நம்பிக்கைகள், மகிழ்வான தருணங்கள், சிறப்புகள் பற்றி விரிவாகவும், இயல்பாகவும், ஏற்புடையத்தக்க வகையிலும் விளக்குகிறது. வின்சென்ட் பீலே நேர்மறைச் சிந்தனையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

நேர்மறைச் சிந்தனையின் சிறப்பு[தொகு]

    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கை, சாதகமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர் மக்கள் எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துக்றார்.

நார்மன் வின்சென்ட் பீலேவின் பிற தலைப்புகள்[தொகு]

    உன்னால் முடியும் நீ நினைத்தால் உன்னால் முடியும்
    நேர்மறைச்சிந்தனை வாழ்வு
    நேர்மறைச்சிந்தனையின் வியப்பூட்டும் முடிவுகள்

சான்றாதாரம்[தொகு]

    https://en.wikipedia.org/wiki/Norman_Vincent_Peale