நார்த் 24 காதம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நார்த் 24 காதம்
இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன்
தயாரிப்பாளர் சி. வி. சாரதி
கதை அனில் ராதாகிருஷ்ணன் மேனன்
நடிப்பு
இசையமைப்பு கோவிந்த மேனன், ரெக்ஸ் விஜயன்
ஒளிப்பதிவு ஜெயேஸ் நாயர்
படத்தொகுப்பு திலீப்
வெளியீடு 15 செப்டம்பர் 2013
கால நீளம் 125 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி மலையாளம்

நார்த் 24 காதம் (North 24 Kaatham) என்பது மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் தலைப்பிற்கு தமிழில் வடக்கு 24 மைல் என்று பெயர். இத்திரைப்படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்னன் மேனன் ஆவார். இத்திரைப்படத்தில் ஃபகத் பாசில், நெடுமுடி வேணு மற்றும் சுவாதி ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தியதி ஓணம் பண்டிகையின் போது வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக கோவிந்த மேனன் மற்றும் ரெக்ஸ் விஜயன் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தை சி. வி. சாரதி என்பவர் தயாரித்திருந்தார்.