நார்கொண்டம் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நார்கொண்டம் தீவு
Narcondam I- locale.png
அந்தமான் நிகோபார் தீவின் வரைப்படத்தில் நார்கொண்டம் தீவின் அமைவிடம்
நார்கொண்டம் தீவு is located in Andaman and Nicobar Islands
நார்கொண்டம் தீவு
நார்கொண்டம் தீவு
நார்கொண்டம் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்13°27′N 94°16′E / 13.45°N 94.27°E / 13.45; 94.27ஆள்கூறுகள்: 13°27′N 94°16′E / 13.45°N 94.27°E / 13.45; 94.27
தீவுக்கூட்டம்அந்தமான் நிகோபார் தீவு
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
 • நார்கொண்டம்
பரப்பளவு7.63 km2 (2.95 sq mi)[1]
நீளம்3.9 km (2.42 mi)
அகலம்3.0 km (1.86 mi)
கரையோரம்12.22 km (7.593 mi)
உயர்ந்த ஏற்றம்710 m (2,330 ft)[2]
நிர்வாகம்
DistrictNorth and Middle Andaman
Island groupஅந்தமான் நிகோபார் தீவுகள்
Island sub-groupகிழக்கு எரிமலைத்தீவுகள்
Tehsilதிக்லிபூர்
பெரிய குடியிருப்புநார்கிண்டம் காவல் நிலையம் (மக். 16)
மக்கள்
மக்கள்தொகை16 (2016)
அடர்த்தி2.1 /km2 (5.4 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, அந்தமானிய மக்கள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[3]
Telephone code031927 [4]
ISO codeIN-AN-00[5]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
Literacy84.4%
Avg. summer temperature30.2 °C (86.4 °F)
Avg. winter temperature23.0 °C (73.4 °F)
Sex ratio1.2/
Census Code35.639.0004
Official Languagesஇந்தி, ஆங்கிலம்
நார்கொண்டம் மலை
உயர்ந்த இடம்
உயரம்710 m (2,330 ft)
புவியியல்
அமைவிடம்அந்தமான் தீவுகள், இந்தியா
நிலவியல்
கடைசி வெடிப்புதெரியவில்லை

நார்கொண்டம் தீவு என்பது அந்தமான் கடலில் உள்ள ஒரு சிறு எரிமலைத் தீவு ஆகும். தீவின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 710 மீ எழும்புகிறது. இத்தீவு அந்தமான் தீவின் ஒரு பகுதியாகும். இந்த தீவு சுமார் 6.8 சதுர கிலோமீட்டர் அளவுடைய ஒரு மிக சிறியது ஆகும்[6]. இந்த எரிமலை உறங்கும் நிலையில் உள்ள ஒரு தீவு ஆகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

நார்கொண்டம் என்பது தமிழ் வார்த்தையான நரக-குண்டம் [7] என்பதிலிருந்து தோன்றியது ஆகும்[8].

வரலாறு[தொகு]

1986 வரை பர்மா இத்தீவிற்கு உரிமை கோரியது. அந்தமான் கடல், கோகோ கால்வாய் மற்றும் வங்கால விரிகுடா பகுதிகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே கடல்வழி எல்லையை வரம்புபடுத்தியதால் இந்த உரிமையை கைவிடப்பட்டது[9] [10]. 1983-ல் நார்கொண்டம் சரிவுகளில் கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது[11].

புவியியல்[தொகு]

போர்ட் பிளேயரிலிருந்து வடகிழக்கே 256 கி.மீ-ல் அமைந்துள்ளது. மேலும் தென்மேற்கே (சுமார் 150 கி.மீ) உயிர்ப்புள்ள தீவான பாரன் தீவு அமைந்துள்ளது. நார்கொண்டம் தீவு, பர்மாவிலிருந்து 160 மைல்கள் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து 800 மைல்கள் தொலைவிலும் உள்ளது. இது கிழக்கு எரிமலைத்தீவுகளுடன் சேர்ந்தது. இந்த தீவு சிறியது, 7.63 கி.மீ2 பரப்பளவுக் கொண்டது. இத்தீவின் பெரும் பகுதி காடுகளால் ஆனது. ஒரு எரிமலையில் உருவானது இத்தீவு. சமீபகாலமாக இத்தீவு உயிர்புடன் இருந்ததாக இந்த தகவலும் இல்லை. ஆனால் ஜீன் 8, 2005–ல் புகையும் மண்ணும் எரிமைலையில் இருந்து வெளிவந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தமான் நிகோபார் தீவுகளின் கிழக்கு எல்லையில் நார்கொண்டம் தீவு அமைந்துள்ளது.

நார்கொண்டம் மலை[தொகு]

நார்கொண்டம் தீவிலுள்ள எரிமலை அந்தமான நிகோபார் தீவுகளின் இரண்டாம் மிக உயர்ந்த புள்ளி ஆகும, வட அந்தமான் தீவில் உள்ள சாடில் சிகரம் முதல் இடத்தில் இருக்கின்றது.

நிர்வாகம்[தொகு]

வடக்கு மற்றும் மத்திய அந்தாமானின் நிர்வாக மாவட்டத்தில்[12] சேர்ந்தது நார்கொண்டம் தீவு. இது திக்லிபூர் தாலுக்காவின் ஒரு பகுதியாகும்[13]. கிராமம் காவ நிலையத்திற்கு அருகில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

திக்லிபூரிலிருந்து படகு பயணம் உள்ளது. சாதாரண கப்பல் வாரத்திற்கு ஒரு முறை உண்டு, காவல்துறையால் மட்டும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது[14] .

மக்கள்தொகை[தொகு]

ஒரு கிராமம் மட்டும் உள்ளது. 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒரு குடும்பம் மட்டும் உள்ளது. எழுத்தறிவு சதவீதம் 100%[15].

மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[15]
மொத்தம் ஆண் பெண்
மக்கள்தொகை 16 16 0
6 வயதுக்கு குறைவான குழந்தைகள் 0 0 0
தாழ்த்தப்பட்டவர் 0 0 0
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 16 16 0
எழுத்தறிவு பெற்றோர் 16 16 0
வேலை செய்வோர் (அனைவரும்) 16 16 0
முக்கிய வேலை செய்வோர் (மொத்தம்) 16 16 0

16 குடியிருப்புவாசிகளும் ஒரே வீட்டில் வடகிழக்கு மூலையில் வாழ்ந்துவருகின்றனர். ஒரு சிறு விளைச்சல் நிலத்தில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் அறுவடை செய்கின்றனர்.

சுற்றுலா[தொகு]

நார்கொண்டத்தில் ஆழ்கடல் நீச்சல்[தொகு]

நார்கொண்டம் தீவை சுற்றி இருக்கும் நீரெல்லாம் ஆழ்கடல் நீச்சலுக்கு உகந்த இடமாகும். நார்கொண்டத்தில் முக்கிய ஆழ்கடல் நீச்சல் இடங்கள், பாறை முனைகள் மற்றும் சுர்மையான சரிவுகளான சிம்னி, ஊ லா லா, மற்றும் கலங்கரை பவளப்பாறைகள் ஆகும்.

நார்கொண்டம் தீவு வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம்[தொகு]

இந்திய அரசாங்கத்தால் ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது நார்கொண்டம் தீவு வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயம். யுனெச்கோவின் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இவ்விடமும் உள்ளது.

நார்கொண்டம் இருவாய் குருவி[தொகு]

நார்கொண்டம் இருவாய் குருவி என்பது ஒரு அழிந்துகொண்டிருக்கும் இருவாய் குருவி இனம் ஆகும். இது இத்தீவில் மட்டும் தான் தற்போது மிச்சம் இருக்கின்றது[16]. வடகிழக்கு இந்தியாவில் உள்ள இருவாய் குருவியிலிருந்து இது தனியாக தோன்றியிருக்கலாம்.

படக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Islandwise Area and Population - 2011 Census". Government of Andaman.
 2. pro star
 3. "A&N Islands - Pincodes" (2016-09-22). மூல முகவரியிலிருந்து 2014-03-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-09-22.
 4. code
 5. Registration Plate Numbers added to ISO Code
 6. Yahya, H. S. A.; Zarri, A. A. (2002). "Status, ecology and behaviour of Narcondam Hornbill (Aceros narcondami) in Narcondam Island, Andaman and Nicobar Islands, India". J. Bombay Nat. Hist. Soc. 99 (3): 434–445. 
 7. Washington, H. S. (1924-06-01). "The lavas of Barren Island and Narcondam". American Journal of Science s5-7 (42): 441–456. doi:10.2475/ajs.s5-7.42.441. 
 8. "Narcondum". The National Museum of Natural History. பார்த்த நாள் 2010-04-21.
 9. Charney, Jonathan I. & Alexander, Lewis M.; International maritime boundaries, Volumes 2-3; American Society of International Law, Report 6-3, pg. 1329-1336; Martinus Nijhoff Publishers, 1998
 10. Book
 11. "Government of India, Directorate General of Lighthouses and Lightships.". www.dgll.nic.in. பார்த்த நாள் 2016-10-18.
 12. "Village Code Directory: Andaman & Nicobar Islands". Census of India. பார்த்த நாள் January 16, 2011.
 13. Tehsils
 14. pic
 15. 15.0 15.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands". 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. மூல முகவரியிலிருந்து 2015-08-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-07-21.
 16. "Narcondam Island".

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Narcondam Island
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:North and Middle Andaman district

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்கொண்டம்_தீவு&oldid=2846377" இருந்து மீள்விக்கப்பட்டது