நாரிழைத்துணி

நாரிழைத்துணி (linen) என்பது ஒருவகை நற்சணல் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர் நேர்த்தியான நாரிழைத்துணி நெய்தனர். எகிப்திய, யூத மத குருக்கள் மதச்சடங்குகள் செய்யும்போது நாரிழைத்துணி உடுத்தினர். கிரேக்க நாகரிகம் பெருவளர்ச்சி அடைந்த சமயம், வசதிபடைத்தோரும் நாரிழைத்துணியை பயன்படுத்தினர். ஐரோப்பிய வரலாற்று இடைக்காலத்தில் ஐரோப்பிய மக்கள் பெரும்பாலோர் நாரிழைத்துணியை பயன்படுத்தினர்.
பயன்கள்[தொகு]
பாய்மரக்கப்பலில் பயன்படும் பாய்த் துணி, கித்தான், தர்ப்பாய், கோணி, விரிப்பு முதலிய முரட்டுத்துணி முதல் கைக்குட்டை, சட்டைத்துணி முதலிய மெல்லியவகை துணி வகைகள் வரை தயாரிக்கப்படுகின்றன.[1][2] [3]