உள்ளடக்கத்துக்குச் செல்

நாராயண கொங்கணபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண கொங்கணபள்ளி (Narayana Konganapalle) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய இணை விளையாட்டு துடுப்புக்காரர் ஆவார். உலக படகோட்டல் ஆசிய மற்றும் ஓசியானிய ஒலிம்பிக்கு மற்றும் இணை ஒலிம்பிக்கு 2024 போட்டி களுக்கான தகுதிப் போட்டியில் அனிதாவுடன் சேர்ந்து இவரும் தகுதி பெற்றார்.[1][2] முன்னதாக, சீனாவின் ஆங்க்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய இணை விளையாட்டுப் போட்டிகளில் அனிதாவுடன் இணைந்து பிஆர் 3 கலப்பு இரட்டையர் பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை.

[தொகு]

நாராயண கொங்கனபள்ளி இந்திய இராணுவத்தில் ஒரு படைத்துறை சிப்பாய் ஆவார். இவர் ஆந்திராவின் நந்தியா நகரத்தைச் சேர்ந்தவர். [2] இவர் நிலச் சுரங்க வெடிப்பில் இருந்து தப்பியவர். புனேவில் உள்ள இராணுவ படகோட்டுதளத்தில் சுபேதார் முகமது ஆசாத் இவருக்கு பயிற்சியளிக்கிறார்.[1] சென்னை பொறியியல் குழுமத்தைச் சேர்ந்த இவர் 2007 ஆம் ஆண்டில் இராணுவத்தில் சேர்ந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Accident amputee Anita and landmine blast survivor Narayana combine to secure India's first Paralympic rowing qualification". The Indian Express (in ஆங்கிலம்). 2024-04-21. பார்க்கப்பட்ட நாள் 2024-08-13.
  2. 2.0 2.1 Subrahmanyam, V. V. (2024-04-22). "Paris 2024: Landmine blast survivor Narayana Konganapalle combines with Anita to secure Paralympic quota in rowing". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-13.
  3. Today, Telangana (2023-10-28). "Para Asian Games: Indian rowers Anita, Narayana Konganapalle bag silver in PR3 Mixed Doubles Sculls". Telangana Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-13.
  4. "Para-rowers Narayana, Kuldeep win bronze at World Rowing Cup 2". 2022-06-19. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/para-rowers-narayana-kuldeep-win-bronze-at-world-rowing-cup-2/articleshow/92321592.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_கொங்கணபள்ளி&oldid=4119834" இலிருந்து மீள்விக்கப்பட்டது