நாராயண கவசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண கவசம் [1] [2] என்னும் நூல் பற்றிய செய்தி பாகவதம் ஆறாம் கந்தம் என்னும் பிரிவில் வருகிறது. இந்தக் கவசத்தை விச்சுவரூபன் என்பவன் இந்திரனுக்குச் சொல்லித்தந்தானாம். இந்திரன் அவுணர்களோடு போரிட்டபோது இந்த மந்திரத்தைச் சொல்லி வெற்றி பெற்றானாம். நாராயண கவசத்தில் 25 பாடல்கள் உள்ளன. வெற்றி பெற்றதைக் கூறும் பாகவதப் பாடல் [3]

நாலெழுத்து மந்திரம்[தொகு]

பத்தி செய்தாயினும் பகை செய்தாயினும்
வித்தகன் ஒருவன் பேர் விளம்பற்கு ஆயினும்
ஒத்த நாராயணா என உரைப்பரேல்
கொத்து வெம் பாதகம் குலைந்து நீங்குமே

தும்மினும் இருப்பினும் துயரம் மிக்கு உளம்
விம்மினும் வீழினும் வினை செய் போதினும்
அம்ம இந் நாலெழுத்து அறைவரேல் அவர்
செம்மலர் மால் பதம் நேர்தல் திண்ணமே

நாராயண கவசப் பாடல்[தொகு]

மலர்ந்த செங்கமல மலர்மகள் மரு ஆர் மார்வமும் வாளி கேடகம் வாள்
இலங்கு எழில் ஆழி வளை கதை பாசம் இருஞ்சிலை தரித்த வெண் கரமும்
நலம் தரு கலுழன் புயத்து இனிது உறைந்த நளின மென் பாதமும் ஆக
வலம் தர முன்வந்த தெங்கு மெய் பொழுதும் மாயவன் மருணையில் காக்க

புகழ் பெறு மீன் உரு எடுத்த புங்கவன்
அகம் மகிழ்தந்து நீ அடைந்து காக்க; இச்
சகமிசை வாமணன் சார்ந்து காக்க; வேர்
மிகு நிலம் அளந்த மால் விசும்பில் காக்கவே

பன்னிய வரை முதல் பல அரண்களில்
துன்னு வெம் சமத்திடைத் தோன்றலுற்று முன்
மன்னு வெம் கனகனை மாய்த்த மைந்துடை
நன்னலம் சேர்தர மடங்கல் காக்கவே

மேலும்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 239. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 183. 
  3. பாடல்கள் பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_கவசம்&oldid=1451132" இலிருந்து மீள்விக்கப்பட்டது