நாராயண் கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயண் கோபால் குரு ஆச்சார்யா [1] ( நேபாளி: नारायणगोपाल गुरुआचार्य) (அக்டோபர் 4, 1939 - டிசம்பர் 5, 1990), தொழில் ரீதியாக நாராயண் கோபால் மற்றும் என்.கோபால் [2] என அழைக்கப்படும் ஒரு பிரபல பாடகர் மற்றும் நேபாளி இசையமைப்பாளர் ஆவார். (நேபாளத்தின் மிக முக்கியமான கலாச்சார சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவர் நேபாளத்தில் "ஸ்வர் சாம்ராட்" என்று குறிப்பிடப்படுகிறார்.. அவரது பாடியுள்ள ஏராளமான சோகப் பாடல்களால் அவர் "சோக அரசர்" என்றும் அழைக்கப்படுகிறார். அவர் நேபாள மொழியிலும் பாடியுள்ளார்.

அவரது குரல் வளத்தின் காரணமாக அவர் அனைத்துவகை நேபாளப் பாடல்களையும் பாடக்கூடியவராக இருந்தார். பெரும்பாலும், அவரது பாடல்களில் சித்தார், ஆர்மோனியம் மற்றும் [[புல்லாங்குழல்|புல்லாங்குழல் ஆகியவை உடன் இணந்திருந்தன. 1950 கள் முதல் 70 கள் வரை இசை இயக்குநராக இருந்த இவர் முதல் தலைமுறையைச் சார்ந்த தொழில்முறை நேபாளிப் பாடகர் ஆவார்.. இவரது பாடல்கள் நாடு முழுவதும் பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[3][4][5]

நாராயண் கோபால் தனது வாழ்நாளில் 137 பாடல்களைப் பாடியுள்ளார், அவரது முதல் பாடலுக்கு அவரது நண்பர் பிரேம் தோஜ் பிரதான் மற்றும் அவரது ஆசிரியர் மாணிக் ரத்னா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்தனர்.[6] கோபால் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குமிக்க இசைக்கலைஞர்களில் ஒருவர். கோபால் அவரது வாழ்நாளில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நாராயண் கோபால் குரு ஆச்சார்யா காத்மாண்டுவில் உள்ள கிலகல்டோலில் ஒரு நேவார் குடும்பத்தில் 1939 அக்டோபர் 4 அன்று, ஆஷா கோபால் குரு ஆச்சார்யா (தந்தை) மற்றும் ராம் தேவி குரு ஆச்சார்யா (தாய்) ஆகியோருக்கு பிறந்தார். அவருக்கு ஆறு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவரது உடன்பிறப்புகளின் பெயர் மனோகர் கோபால் குரு ஆச்சார்யா, நந்தா கோபால் குரு ஆச்சார்யா, இராம் கோபால் குரு ஆச்சார்யா, இலட்சுமண் கோபால் குரு ஆச்சார்யா மற்றும் சாந்தி குரு ஆச்சார்யா என்பதாகும்.

2016 ஆம் ஆண்டு பள்ளி விடுப்பு சான்றிதழை (எஸ்.எல்.சி) முடித்தார்.பின்னர் திரி-சந்திரா கல்லூரியில் மனிதநேயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இந்திய பாரம்பரிய இசையினைக் கற்க இந்தியா வந்தார். ஆனால் படிப்பை முடிக்காமல் நேபாளத்திற்குத் திரும்பினார். அவர் 1971 இல் பெமலா லாமாவை மணந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அவரது குரல் திறனை முதலில் அருகிலுள்ள பியுகா டோலில் வசிக்கும் அவரது ஆசிரியர் “மாணிக் ரத்னா ஸ்தாபித்” மற்றும் பேடா சிங் டோலில் வசிக்கும் பிரேம் தோஜ் பிரதான் ஆகியோர் அங்கீகரித்தனர். மூன்று நண்பர்களும் மாணிக் ரத்னாவின் வீட்டில் ஒன்றாக இந்தி பாடல்களைப் பாடுவார்கள், இவர்களுடன் அவரது மாமா சித்தி ரத்னா ஸ்தாபித்தும் இசைக்கருவிகளை இசைப்பது அந்த இடம் ஒரு இசைப் பள்ளியைப் போலவே மாறியது. பள்ளி விடுப்பு சான்றிதழ் தேர்வுகள் முடிந்ததும், பிரேம் தோஜ் பிரதான் குரல் சோதனைக்காக கோபாலை நேபாளத்தின் வானொலி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். டாக்டர் ராம் மேன் திரிசத் எழுதி, பிரேம் தோஜ் பிரதான் இசையமைத்த "பஞ்சி கோ பங்கா மா தார்தி கோ தியோ" என்ற பாடலை அவர் பாடினார். குரல் சோதனையில் கோபால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். நாராயண் கோபாலின் முதல் பொது இசை நிகழ்ச்சி திரி சந்திரா கல்லூரியின் 40 வது ஆண்டுவிழாவின் போது நடந்தது, அதில் அவர் தபேலா வாசித்தார்.[7]

திரைப்பட வரலாறு[தொகு]

நாராயண் கோபால் அதிகாமாகத் திரைப்படங்களில் பாடுவதில்லை, ஆனால் அவர் பாடும்போது அந்தப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும்.[8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_கோபால்&oldid=3560554" இருந்து மீள்விக்கப்பட்டது