நாய்ப்பல் பூனைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாய்ப்பல் பூனைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
(Colubridae)
பேரினம்:
போயிகா
(Boiga)
இனம்:
போ. சைனோடான்
இருசொற் பெயரீடு
போயிகா சைனோடான்
போயி, 1827
வேறு பெயர்கள்
  • திப்சசு சைனோடான் போயி, 1827
  • ஒப்டியோடான் சைனோடான்
    துமெரில் & பிப்ரான், 1854
  • யூடிப்சசு சைனோடான் – குந்தர், 1858
  • திப்சடோமார்பசு சைனோடான்
    – பெளலிங்கர், 1896
  • போயிகா சைனோடான் – பார்பொளர், 1912[1]

நாய்ப்பல் பூனைப்பாம்பு என்பது (போயிகா சைனோடான்-Boiga cynodon) பூனைப்பாம்பு சிற்றினம் ஆகும். இது ஆசியாவில் சொந்தமான காணப்படும் பின்புற-பற்கள் கொண்ட கொலுப்ரிடே பாம்புகளில் இரவாடுதல் வகைச் சிற்றினமாகும் .

விளக்கம்[தொகு]

நாய்ப்பல் பூனைப்பாம்பு மிகப் பெரிய பாம்பு அளவிலான பாம்பு ஆகும். இது 2 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. மேல் தாடை மற்றும் கீழ் தாடையின் முன் பற்கள் வலுவானதாக விரிவடைந்து காணப்படும்.[2]

உடல் மெல்லியதாகவும் பக்கவாட்டில் சுருக்கப்பட்டதாகவும் இருக்கும். முதுகுப்புறமாகச் சிவப்பு-பழுப்பு அல்லது அடர் பழுப்பு நிற குறுக்கு பட்டைகள் கொண்டது. தலையின் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணுக்குப் பின்னால் ஒரு இருண்ட கோடு காணப்படும். வயிற்றுச் செதில்கள் வெண்மையுடன், அடர் பழுப்பு நிறத்துடன் பளிங்கு போன்று காணப்படும்.

மென்மையான முதுகு செதில்கள் நடுப்பகுதியில் 23 அல்லது 33 வரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும். முதுகெலும்பு வரிசையில் உள்ளவை வலுவாகப் பெரிதாக உள்ளன. வயிற்றுப்புற தகடுகள் 248–290 வரையும் வால் பக்கத்தகடுகள் சப்காடல்கள் 114–165 வரையும் காணப்படும்.[3]

உணவு[தொகு]

நாய்ப்பல் பூனைப்பாம்பு, முக்கியமாகச் சிறிய பறவைகள் மற்றும் பறவை முட்டைகளை உண்கிறது. பல்லிகள் மற்றும் சிறிய வெளவால்களையும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.[3]

இனப்பெருக்கம்[தொகு]

நாய்ப்பல் பூனைப்பாம்பு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய சிற்றினமாகும். பாலின முதிர்ந்த பெண் பாம்பு ஒரு முறை 6 முதல் 12 முட்டைகளை இடுகின்றன.[3]

புவியியல் வரம்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Reptile Database. www.reptile-database.org.
  2. George Albert Boulenger/Boulenger, G.A. 1896. Catalogue of the Snakes in the British Museum (Natural History). Vol. III., Containing the Families Colubridæ (Opisthoglyphæ and Proteroglyphæ)... Trustees of the British Museum (Natural History). London. xiv. + 727 pp. + Plates I.-XXV. (Dipsadomorphus cynodon, pp. 78-80.)
  3. 3.0 3.1 3.2 Indraneil Das/Das, I. 2006. A Photographic Guide to Snakes and Other Reptiles of Borneo. Ralph Curtis Books. Sanibel Island, Florida. 144 pp. ISBN 0-88359-061-1 (Boiga cynodon, p. 21.)

மேலும் படிக்க[தொகு]

    • Boie, F. 1827. Bemerkungen über Merrem's Versuch eines Systems der Amphibien, 1. Lieferung: Ophidier. Isis van Oken, Jena, 20: 508–566.
    • Bulian, J. 2005. Boiga cynodon - die Grüne Nachtbaumnatter. Reptilia (Münster) 10 (1): 70–77.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்ப்பல்_பூனைப்பாம்பு&oldid=3652847" இலிருந்து மீள்விக்கப்பட்டது