நாய்த் தலையன்
நாய்த் தலையன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | செதிலுடைய ஊர்வன |
துணைவரிசை: | பாம்பு |
குடும்பம்: | Colubridae |
துணைக்குடும்பம்: | Homalopsinae |
பேரினம்: | Cerberus |
இனம்: | C. rynchops |
இருசொற் பெயரீடு | |
Cerberus rynchops (Schneider, 1799) | |
வேறு பெயர்கள் | |
Cerebrus rhynchops |
நாய்த் தலையன் அல்லது உவர்நீர் நாய்த் தலையன் ( Cerberus rynchops) என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் கடலோரப்பகுதிகளில் காணப்படும். பொதுவாக இப்பாம்புகள் சதுப்பு நிலக்காடுகள் , கழிமுகங்கள், நீரோடைகள், குளங்கள், பாசித்திட்டுகள், போன்ற இடங்களிலும், அருகில் உள்ள நிலத்தில் உள்ள வளைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை இரவில் இரை தேடும் விலங்குகள் என்றபோதிலும், சிலசமயம் பகல் நேரத்திலும் இரை தேடும். இதன் முதன்மை உணவு மீன் ஆகும். இவை நீரில் வாழ்ந்தாலும் சுவாசிக்க அவ்ப்போது நீரின் மேற்பரப்புக்கு வரும். இது அச்சுறுத்தப்படும் பொழுது தரையில் எம்பிக்குதித்து பக்கவாட்டுத் திசையில் விரைவாக நெளிந்து செல்லக்கூடியது. இது அலையாத்தி மரங்களில் ஏறக் கூடியது. அவ்வாறு மரத்தில் ஏற பற்றும் தன்மையுடைய வால் கொண்டுள்ளது. இவை தண்ணீர் அல்லது தரையில் 8 முதல் 30 வரையான எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுவதாக அறியப்படுகிறது.
விளக்கம்[தொகு]
இதன் தலை நாய் போன்ற தோற்றத்தை ஒத்து உள்ளது. மேடுடைய செதில்களுடன், மூன்றடி நீளத்தில் ஐவிரல் தடிமனில் இருக்கும். காரணம் இதன் மேல் தாடை தன்மையாகும். இதன் தலை கழுத்தைவிட அகன்று இருக்கும். இதன் கண்கள் புழுப்பு நிறத்தில் சிறியதாக அழகாக இருக்கும். கண்ணில் நெங்குத்தான கண் பாவையைக் கொண்டிருக்கும். இவற்றின் மேலுடல் ஒரே நிறமாக நீலச்சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சில பாம்புகளுக்கு உடலில் தெளிவாகப் புலப்படாத கரிய கோடுகள் கண்ணிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிச் செல்லும். அடிப்பகுதி வெள்ளையாகவும் தெளிவான கரியபட்டைகள் முன்னும் பின்னும் அமைந்திருக்கும். இதன் வால் பிற கடல் பாம்புகளைப் போல தட்டையாக இல்லாமல் கூர்மையாக இருக்கிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Murphy, J (2009). "Cerberus rynchops". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). http://www.iucnredlist.org/details/176680.
- ↑ "நல்ல பாம்பு 18: அலையாத்திப் புடைவிழியன்" (in ta). https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/759713-snake-18-wandering-python.html.