உள்ளடக்கத்துக்குச் செல்

நாயகன் (2008 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயகன்
இயக்கம்சரவண சக்தி
தயாரிப்புசக்யா செல்லுலாய்ட்
கதைவிஜய்குமார் ரெட்டி
இசைமரியா மனோகர்
நடிப்புஜே. கே. ரித்தீஷ்
ரமணா
சங்கீதி
கீர்த்தி சாவ்லா
அனிதா ஹசானந்தனி
ரச்சனா மௌரியா
ஆனந்த் ராஜ் (நடிகர்)
ராதாரவி
பாண்டியராஜன்
சிறீமன்
தேவிப்பிரியா
வெளியீடுஆகத்து 22, 2008 (2008-08-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாயகன் (Nayagan) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய்குமார் ரெட்டி எழுதி, சரவண சக்தி இயக்கிய [1][2] இப்படத்தை சக்யா செல்லுலாய்டு தயாரித்தது.

இப்படத்தில் ஜே. கே. ரித்தீஷ், ரமணா, சங்கீதா, கீர்த்தி சாவ்லா, அனிதா ஹசானந்தனி, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். பின்னர் இது தெலுங்கில் அங்குசம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3] படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு அனிதா ஹசானந்தனியும், ரச்சனா மௌரியாவும் ஆடியுள்ளனர். படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்தார்.

2008 ஆகத்து 22 அன்று வெளியான இப்படம் இதற்கு முந்தைய ஆண்டில் வெளியான வேகம் திரைப்படத்தின் நேரடி மறு ஆக்கமாகும்.[4] இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லுலார் என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

கதை

[தொகு]

டாக்டர் சந்தியா விஸ்வநாத் ( சங்கீதா ) தனது வீட்டிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவரது கணவர் இருக்கும் இடம் குறித்து அவரிடம் விசாரிக்கப்படுகிறது. அவரது அறையில் உள்ள ஒரு தொலைபேசி கும்பலின் தலைவரால் ( ஆனந்தராஜ் ) அடித்து நொறுக்கப்படுகிறது, என்றாலும் சீரற்ற தொலைபேசி அழைப்புகளைச் செய்ய போதுமானதாக உடைந்த தொலைபேசி துண்டுகளை சேர்க்கிறார். அவரது அழைப்புகளில் ஒன்று சக்திக்கு ( ரமணா) வருகின்றது. அவன் தன் மாமன் மகளானை திவ்யாவை (கீர்த்தி சாவ்லா ) கூட்டிக்கொண்டு ஓடிவந்துள்ளதால் அவனுக்கு வேறு பிரச்சனைகள் உள்ளன. இதனால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவன், சந்தியாவுக்கு உதவ ஒப்புக்கொண்டு, ஒரு காவல் நிலையத்ததுக்கு தொலைபேசி அழைப்பை விடுகிறார். காவல்துறை அதிகாரி குரு ( ஜே. கே. ரித்தீஷ் ) அவளுடன் பேசுகிறார், ஆனால் மற்றொரு பிரச்சனையால் அவர் திசைதிருப்பப்படுகிறார், எனவே சந்தியா மீண்டும் சக்தியைத் தொடர்பு கொள்கிறார். பின்னர் என்ன ஆனது எப்பதே கதையின் பிற்பகுதி ஆகும்

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நாயகன் - விமர்சனம்!". tamil.webdunia.com.
  2. "Review: Nayagan". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "'Nayagan' to speak in Telugu - Telugu Movie News". IndiaGlitz. 2008-09-16. Archived from the original on 2008-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "NAYAGAN - MOVIE REVIEW CAST Rithish Ramana Sangeetha Vaiyapuri Pandiyarajan Anandraj DIRECTION Saravanashakthi MUSIC Mariya Manogar PRODUCTION V.K. Vijayakumar Reddy stills picture image gallery". Behindwoods. 2007-12-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகன்_(2008_திரைப்படம்)&oldid=4152639" இலிருந்து மீள்விக்கப்பட்டது