நாம் மூவர்
| நாம் மூவர் | |
|---|---|
![]() சுவரிதழ் | |
| இயக்கம் | ஜம்புலிங்கம் |
| தயாரிப்பு | கே. ஆர். பாலன்[1] |
| கதை | மகேந்திரன் |
| இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
| நடிப்பு | ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் எல். விஜயலட்சுமி ரத்னா நாகேஷ் |
| ஒளிப்பதிவு | கர்ணன் |
| கலையகம் | பாலன் பிக்சர்ஸ் |
| விநியோகம் | விஜயசிறீ[2] |
| வெளியீடு | ஆகத்து 5, 1966 |
| நீளம் | 4178 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நாம் மூவர் (Naam Moovar) என்பது 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை ஜம்பு என்கிற ஜம்புலிங்கம் இயக்கினார்[3] இப்படத்திற்கான கதையை மகேந்திரன் எழுத, உரையாடலை முல்லை சக்தி எழுதினார். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில நடித்தனர். எல். விஜயலட்சுமி ரத்னா, வி. கே. ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனனர். இந்தத் திரைப்படம் 1966 ஆகத்து 5 அன்று வெளியானது.[4] வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[5]
கதை
[தொகு]நாகேசின் தாயாரான பண்டரிபாய் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரையும் வளர்க்கிறார். பண்டரிபாயின் இறப்புக்குப் பிறகு மூவரும் பிரிக்ன்றனர். ரவிச்சந்திரன் கவல் துறையில் அதிகாரியாகிறார். அவர் ரத்தினாவைக் காதலிக்கிறார். நாகேஷ் ஓவியராகிறார். அவர் மாதவியைக் காதலிக்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரனை ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களிடம் இருந்து ரவிச்சந்திரனை ஜெய்சங்கர் காப்பாற்றுகிறார். இதன் பிறகு பிரிந்த மூவரும் எப்படி மீண்டும் ஒன்று சேந்தனர் என்பதே கதையாகும்.
நடிப்பு
[தொகு]- ஜெய்சங்கர்
- ரவிச்சந்திரன்
- நாகேஷ்
- வி. கே. ராமசாமி
- எல். விஜயலட்சுமி
- ரத்னா
- பண்டரிபாய்
- மாதவி
- சரோஜினி
- மாலா
- தங்கவேலு
- ராஜாமணி
- குமார்
- ஜோ
- ரமணி
தயாரிப்பு
[தொகு]மகேந்திரன் கதை எழுதிய முதல் படம் நாம் மூவர் ஆகும்.[6] எம். ஜி. ராமச்சந்திரனின் நண்பரான கே. ஆர். பாலன், மகேந்திரனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு, பி. மாதவனை இயக்குநராகக் கொண்டு ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். இருப்பினும், நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்த நிலையில், மாதவன் அத்தகைய வித்தியாசமான, யதார்த்தமான கதைக்களத்தை இயக்க முடியாமல் படத்தை விட்டு வெளியேறினார். இதனால் மகேந்திரன் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி யாருக்கும் தெரிவிக்காமல் தனது சொந்த ஊருக்குச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு, பாலன் மகேந்திரனை சென்னைக்குத் திரும்புமாறு ஒரு கடிதம் எழுதினார்; கதையில் மேலும் வணிகக் கூறுகளைச் சேர்க்குமாறு மகேந்திரனை வற்புறுத்தினார். அதற்கு மகேந்திரன் ஒப்புக்கொண்டார். படத்தொகுப்பாளர் ஜம்பு என்ற ஜம்புலிங்கத்தை படத்தை இயக்கும்படி செய்தார்.[7]
இசை
[தொகு]இப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[8] "பிறந்த நாள் இன்று" என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இலங்கை வானொலியில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது.[9]
| பாடல் | வரிகள் | நீளம் |
|---|---|---|
| "பிறந்த நாள் இன்று" | டி. எம். சௌந்தரராஜன் | 05:14 |
| "அடி லல்லா லல்லா எல்லாம் வாருங்கடி" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:52 |
| "சிங்கப்பூர் மச்சான்" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி | 04:31 |
| "வயது வந்த பெண்ணை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:13 |
| "நானோரு பக்கம்" | எல். ஆர். ஈசுவரி, எஸ். சி. கிருஷ்ணன் | 04:57 |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]நாம் மூவர் 1966 ஆகத்து 5 அன்று வெளியானது.[10] கல்கி இதழ் படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்தது. ஆனால் நாகேஷ், ரவிச்சந்திரன், ஜெய்சங்கரின் நடிப்பைப் பாராட்டியது.[11] இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[7]
நூல்
[தொகு]- Mahendran (2013) [2004]. சினிமாவும் நானும் [Cinema and I]. Karpagam Publications. கணினி நூலகம் 54777094.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1966 – நாம் மூவர் – பாலன் பிக்". Lakshman Sruthi. Archived from the original on 8 July 2022. Retrieved 8 July 2022.
- ↑ "We Three". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 August 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660813&printsec=frontpage&hl=en.
- ↑ Randor Guy (14 July 2017). "Naam Moovar (1966)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211118172113/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/naam-moovar-1966/article19275219.ece.
- ↑ "We Three [நாம் மூவர்"]. இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 5 August 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660805&printsec=frontpage&hl=en.
- ↑ "Mahendran, the National Award winning director and actor passes away after a prolonged illness". In.com. 2 April 2019. Archived from the original on 3 April 2019. Retrieved 3 April 2019.
- ↑ "Mullum Malarum director J. Mahendran passes away". தி இந்து. 3 April 2019 இம் மூலத்தில் இருந்து 5 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190405073042/https://www.thehindu.com/news/cities/chennai/mullum-malarum-director-j-mahendran-passes-away/article26715744.ece.
- ↑ 7.0 7.1 Mahendran 2013, ப. 185–186.
- ↑ "Naam Moovar (1966)". Music India Online. Archived from the original on 10 May 2017. Retrieved 31 March 2021.
- ↑ "மகேந்திர பல்லவர் – 38 – சுதாங்கன்". Vikatakavi. 7 December 2019. Archived from the original on 11 March 2023. Retrieved 11 March 2023.
- ↑ Mahendran 2013, ப. 343.
- ↑ "நாம் மூவர்". Kalki. 21 August 1966. p. 17. Archived from the original on 1 April 2024. Retrieved 1 April 2024 – via Internet Archive.
