நாமிச்சே பசார்
நாமிச்சே பசார் नाम्चे बजार | |
---|---|
![]() கோங்குடே இரி முகடு பின்புலத்தில் காட்சி தர நாமிச்சே பசார். | |
Country | நேபாளம் |
Zone | சாகர்மாதா வட்டம் |
மாவட்டம் | சோலுகும்பு மாவாட்டம் |
ஏற்றம் | 3,440 m (11,290 ft) |
மக்கள்தொகை (1991) | |
• மொத்தம் | 1,647 |
நேர வலயம் | நேபாள நேரம் (ஒசநே+5:45) |
Postal code | 56002 |
தொலைபேசி குறியீடு | 038 |
நாமிச்சே பசார் (ஆங்கிலத்தில் Namche Bazaar, Nemche Bazaar அல்லது Namche Baza; நேபாளி: नाम्चे बजारlisten (உதவி·தகவல்)) ஊர் நேபாளத்தின் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் சாகர்மாதா வலயத்தில் சோலுகும்பு மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரின் மிகத்தாழ்ந்த பகுதியே கடல்மட்டத்திலிருந்து 3440 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த செர்ப்பா என்னும் இன மக்கள் பெரும்பாலும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுகின்றனர். நேபாள நாட்டிலேயே மிகவும் விலைமிக்க செலவுமிக்க இடம் நாமிச்சே பசார்தான். நேபாளத்தின் தலைநகரான காட்டுமாண்டு நகரத்தைவிட மூன்றுமடங்கு கூடுதல் செலவுமிக்க இடம் இது. இங்கே நேபாள அரசின் அதிகாரிகளும், அலுவலகங்களும், தடுப்புக்காவல் நிலையங்களும் உள்ளன.
2011 ஆண்டின் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1647, இவர்கள் 397 தனி வீடுகளில் வாழ்கின்றார்கள்.[1]
இடவமைப்பு[தொகு]
நாமிச்சே பசாருக்கு அருகே மேற்கே கோங்குடே இரி (Kongde Ri) என்னும் உயரிய மலையும், உயரம் 6187 மீட்டர் கிழக்கே தாம்செர்க்கு என்னும் 6623 மீட்டர் உயரிய மலையும் உள்ளது.
போக்குவரத்து[தொகு]
இவ்வூருக்குப் போய்வர கால்நடையாகத்தான் சென்றுவரமுடியும். குதிரை, கழுதை, மாடு, கவரிமா ஆகியவற்றின் மீதும் பொருள்களை ஏற்றிச்சென்றுவரலாம். நாமிச்சே பசார் ஊருக்கு மேலாக 3,750 மீ / 12,303 அடி உயரத்தில் சியாங்குபுச்சே வானூர்திநிலையம் உள்ளது, ஆனால் அது பயணிகள் செலவுக்கு இல்லை. எப்பொழுதாவது உருசிய பொருள் ஏற்றுமதி இறக்குமதிக்கு உலங்கு வானூர்தித் தளமாகப் பயன்படுகின்றது.
சுற்றுலா[தொகு]
நாமிச்சே பசார் மலையேறிகளும் கரட்டுநடையாளர்களும் (trekkers) குவியும் இடம். கும்புப் பகுதிக்குச் செல்ல இதுவொரு வாயிற்புறம். உயரச்சூழலில் பழக்கப்படவும் இது முக்கியமான இடம். இவ்வூரில் நிறைய விடுதிகளும் உணவகங்களும் உள்ளன. இணைய வசதிகளும் கம்பியில்லா இணைய வசதிகளும் உள்ள காப்பி-தேநீர் விடுதிகள் பல உள்ளன.
சனிக்கிழமை காலையில், கிழமைதோறும் நடக்கும் சந்தை ஊரின் நடுவில் நடக்கும். நாளும் நடக்கும் திபேத்திய சந்தையும் உண்டு. ஆடைகளும் மலிவான சீனப் பண்டங்களும் பெரும்பாலும் விற்பனைப்பொருள்களாகவிருக்கும்.
தட்பவெப்பநிலை[தொகு]
நாமிச்சே குளிர்ந்த ஈரப்பதமான கோடைக்காலமும், உலர்ச்சியான குளிர்காலமும் கொண்டது. இவை பெரும்பாலும் உயரத்தாலும் கோடைக்கால பருவ மழையாலும் மாறுபடுவது.
தட்பவெப்ப நிலைத் தகவல், நாமிச்சே பசார் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 7 (45) |
6 (43) |
9 (48) |
12 (54) |
14 (57) |
15 (59) |
16 (61) |
16 (61) |
15 (59) |
12 (54) |
9 (48) |
7 (45) |
11.5 (52.7) |
தாழ் சராசரி °C (°F) | -8 (18) |
-6 (21) |
-3 (27) |
1 (34) |
4 (39) |
6 (43) |
8 (46) |
8 (46) |
6 (43) |
2 (36) |
-3 (27) |
-6 (21) |
0.8 (33.4) |
பொழிவு mm (inches) | 26 (1.02) |
23 (0.91) |
34 (1.34) |
26 (1.02) |
41 (1.61) |
140 (5.51) |
243 (9.57) |
243 (9.57) |
165 (6.5) |
78 (3.07) |
9 (0.35) |
39 (1.54) |
1,067 (42.01) |
ஆதாரம்: thamel.com[2] |
படக்காட்சி[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. பார்த்த நாள் November 14, 2008.
- ↑ "Climatological Data for Selected Trekking Towns". thamel.com. பார்த்த நாள் November 13, 2003.
External links[தொகு]
- Hiking Namche and Everest, GoNOMAD feature article
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Namche Bazaar
- Image of Shrine at Namche Bazar