உள்ளடக்கத்துக்குச் செல்

நாமன் ஒஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாமன் ஓஜா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நாமன் ஓஜா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாபசூன் 5 2010 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதது ஏ-தர இ20
ஆட்டங்கள் 1 63 66 30
ஓட்டங்கள் 1 3,380 2,181 706
மட்டையாட்ட சராசரி 1.00 33.13 35.17 27.15
100கள்/50கள் 0/0 2/27 6/10 0/5
அதியுயர் ஓட்டம் 1 214* 167 94*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/1 172/25 79/22 13/7
மூலம்: Cricket Archive, சூன் 06 2010

நாமன் ஓஜா (Naman Ojha, பிறப்பு: சூலை 30 1983) மத்தியபிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்டு 28, 2015 இல இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1]

ஆகஸ்டு 14,2016 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற இரு தேர்வு துடுப்பாட்டங்கள் மற்றும் நான்கு நாடுகள் பங்கேற்கும்  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான இந்திய ஏ அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் இருநூறு மற்றும் நூறு ஓட்டங்கள் அடித்தார்.[2]

2000-2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல்தரத் துடுப்பாட்டங்களில் இவர் மத்தியப் பிரதேச அணிக்காக துவக்க மட்டையாளராகவும்,குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டார்.[3]

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்[4]. இந்தத் தொடரில் இவர் சிறப்பாக விளையாடி இரு அரைநூறுகள் அடித்தார். அதில் 11 ஆறுகளும் அடங்கும். மத்திய பிரதேச இருபது20 லீக்கில் இவர் இந்தூர் அணிக்காக விளையாடினார்.

பிரிசுபேனில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடிய இவர் இருதிவரை ஆட்டமிழக்காமல் 219 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 28 நான்குகளும் 8 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.

சூலை 2014 இல் பிரிசுபேனில் நடைபெற்ற ஆத்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்திய ஏ அணியில் விளையாடினார். இது இவரின் 100 ஆவது போட்டி ஆகும். இதன் இரண்டு ஆட்டப் பகுதியிலும் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார்.இதன் முதல் ஆட்டப் பகுதியில் இருநூறு ஓட்டங்களை அடித்து இந்திய அணி 475 ஓட்டங்கள் எடுப்பதற்கு உதவினார். இதில் 250 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 219 ஓட்டங்களை எடுத்தார். இதில் 29 நான்குகளும் 8 ஆறுகளும் அடங்கும்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

2010 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி சிம்ப்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் அணியில் குச்சக் காப்பாளராக இவருக்கு இடம் கிடைத்தது. ஏனெனில் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்தனர்[5]. ஆகஸ்டு 2015 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 32 ஆகும். இந்தப் போட்டியில் விரித்திமன் சாஹாவிற்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 56 ஓட்டங்கள் எடுத்தார் மேலும் நான்கு எதிரணி வீரர்களை கேட்ச் முறையிலும் ஒருவரை ஸ்டம்பிங் மூலமும் வீழ்த்தினார்.[6][7]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2000-2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல்தரத் துடுப்பாட்டங்களில் இவர் மத்தியப் பிரதேச அணிக்காக துவக்க மட்டையாளராகவும்,குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டார். 208-2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சேலஞ்சர் கோப்பைக்கான தொடரில் 96 ஓட்டங்கள் அடித்தார்.[8]

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் இவர் சிறப்பாக விளையாடி இரு அரைநூறுகள் அடித்தார். அதில் 11 ஆறுகளும் அடங்கும்.

2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை 83 லட்சத்தில் இவரை எலத்தில் எடுத்தது. இவர் 36 பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்தார். சந்தீப் சர்மா வீசிய 19 ஆவது ஓவரில் 26 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டம் 200 ஆவதற்கு உதவினார். இந்தப் போட்டியில் சந்தீப் 65 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்ற்றினார். இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது மோசமான பந்துவீச்சாக அமைந்தது.

சான்றுகள்[தொகு]

  1. "India tour of Sri Lanka, 3rd Test: Sri Lanka v India at Colombo (SSC), Aug 28-Sep 1, 2015". ESPNCricinfo. 28 August 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
  2. http://indianexpress.com/article/sports/cricket/naman-ojha-to-lead-india-a-team-in-australia-2875426/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-13. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
  4. "Naman Ojha to join Rajasthan Royals". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
  5. "Raina to lead India in Zimbabwe". ESPNcricinfo. 9 May 2015. http://www.espncricinfo.com/ci/content/story/459056.html. பார்த்த நாள்: 4 September 2015. 
  6. Ugra, Sharda (26 August 2015). "Ojha's time to 'relax' before Test debut". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/913945.html. பார்த்த நாள்: 4 September 2015. 
  7. Ugra, Sharda (2 September 2015). "The Ashwin show, and Ishant's second wind". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/916785.html. பார்த்த நாள்: 4 September 2015. 
  8. "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), archived from the original on 2018-03-10, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமன்_ஒஜா&oldid=3718910" இலிருந்து மீள்விக்கப்பட்டது