உள்ளடக்கத்துக்குச் செல்

நாபா, நகரம்

ஆள்கூறுகள்: 30°22′N 76°09′E / 30.37°N 76.15°E / 30.37; 76.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாபா
நகரம்
நாபா is located in பஞ்சாப்
நாபா
நாபா
Location in Punjab, India
ஆள்கூறுகள்: 30°22′N 76°09′E / 30.37°N 76.15°E / 30.37; 76.15
Country India
Stateபஞ்சாப்
மாவட்டம்பட்டியாலா
அரசு
 • வகைஜனநாயகம்
 • நிர்வாகம்நகராட்சி மன்றம் நாபா
 • சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) சட்டமன்ற உறுப்பினர்சாது சிங் தர்மசோத்
 • நகரத்தந்தைஇரஜனிஷ் குமார் மிட்டல் சாந்தி
ஏற்றம்
246 m (807 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்67,972
Languages
 • Officialபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
147201
Telephone code91-(0)1765
வாகனப் பதிவுPB-34

நாபா (ஆங்கிலம்: Nabha) என்பது இந்திய மாநிலமான பஞ்சாபின் தென்மேற்கே உள்ள பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இது முன்னாள் நாபா மாநிலத்தின் தலைநகராகவும் இருந்துள்ளது. இது பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தின் கீழ் வரும் ஒரு துணை பிரிவு நகரமாகவும் உள்ளது.

நாபாவின் சுதேச மாநிலம்

[தொகு]

நாபா நகரம் முன்னர் பிரித்தானிய ராச்சியத்தில் நாபா சுதேச அரசின் தலைநகராக இருந்துள்ளது. அதன் பிரதேசங்கள் பரவலாக சிதறியிருந்தன. ஒரு பகுதி, பன்னிரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பஞ்சாபின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பாட்டியாலா மற்றும் ஜிந்து பிரதேசங்களிலிருந்து பிரிக்கப்பட்டது. மற்றொரு பிரிவு அந்த மாகாணத்தின் தீவிர தென்கிழக்கில் ரேவாரி மற்றும் பவாலில் இருந்தது. 1857 இல் சுதந்திரம் முதல் போர் ஜஜ்ஜரின் சக இந்திய ஆட்சியாளரான அப்துர் ரகுமானுக்கு எதிராக போராடியதற்காக ஆட்சியாளரான ஹிரா சிங் ஆங்கிலேயரிடமிருந்து இந்தப் பகுதியைப் பெற்றார்.

நிலவியல்

[தொகு]

நாபா 30°22′N 76°09′E / 30.37°N 76.15°E / 30.37; 76.15 [1] இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 246 மீட்டர் (807 அடி) ஆகும்.

புள்ளி விவரங்கள்

[தொகு]

2011இன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [2] நபாவின் மக்கள் தொகை 67,972 பேர் ஆகும். அதில் ஆண்கள் 53 சதவீதம் பேர் மற்றும் பெண்கள் 47 சதவீதம் பேர் என்ற அளவில் இருந்தனர். நாபாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 74 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 79 சதவீதமும், பெண் கல்வியறிவு 69 சதவீதமும் ஆகும். நாபாவின், மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

நகரின் அடையாளங்கள்

[தொகு]

அரசர்கள் தங்கும் நகரமாக இருந்ததால், நாபாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டிடங்கள் கட்டப்பட்டன: கன்ட் சாலை, நண்பர்கள் காலனியில் உள்ள சிறீசாநி தேவ் ஒரு புகழ்பெற்ற ஒரு இந்துக் கோவிலாகும்

நவீன நாபா

[தொகு]

1947 ஆம் ஆண்டில், நாபா பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநில ஒன்றியத்தின் ( பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் ) ஒரு பகுதியை உருவாக்கியது. அடுத்தடுத்த மறுசீரமைப்பில், பாட்டியாலா ஒரு மாவட்டமாகவும், நாபா பாட்டியாலா மாவட்டத்தில் ஒரு துணைப்பிரிவாகவும் உருவாகியது.

நவீன நாபா ஓரளவு வளமான மண் நிறைந்த பகுதியாகையால் ( பாட்டியாலாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர்) செழிப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த அறுவடை செய்பவர்களின் உற்பத்தி மையமாக நாபா பிரபலமாக உள்ளது. நாபா நகரத்தின் புறநகரில் கிரா என்க்ளேவ் என்ற பெயர் கொண்ட ஒரு புதிய காலனி நிறுவப்பட்டுள்ளது. மேலும் சுமார் 5000 மக்கள் தொகை கொண்ட 864 அடுக்கு மாடிக் கட்டிடத்தைக் கொண்டுள்ளது

இந்தியாவின் பல நகரங்களைப் போலவே, நாபாவிலும் "நுழைவாயில்கள்" என்று அழைக்கப்படும் அடையாளங்கள் உள்ளன. அவை நகரத்தை சுற்றி அமைந்துள்ளன. பாட்டியாலா நுழைவாயில், அல்கோரன் நுழைவாயில், துல்லாடி நுழைவாயில், மெக்சு நுழைவாயில் மற்றும் பௌரன் நுழைவாயில் ஆகியவை அமைந்துள்ளது.

அரசியல்

[தொகு]

நாபா சட்டமன்றத் தொகுதியாக உள்ளது. இதன் சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) சட்டமன்ற உறுப்பினர் சாது சிங் தர்மசோத் என்பவராவார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc – Nabha
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nabha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபா,_நகரம்&oldid=3218289" இலிருந்து மீள்விக்கப்பட்டது