நான் யார்? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான் யார்?
நூல் பெயர்:நான் யார்?
ஆசிரியர்(கள்):டி.எம்.வாசகம்
வகை:தத்துவம்
துறை:தத்துவ விளக்கம்
இடம்:கோவை
மொழி:தமிழ்
பக்கங்கள்:48
பதிப்பகர்:விஜயா பதிப்பகம்
பதிப்பு:2012

நான் யார்? என்பது 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இரமண மகரிசி வழங்கிய உபதேசம் ஆகும். இந்த உபதேசம் குறித்த தன்னிலை விளக்கம் நான் யார் என்ற நூலாக வெளியிடப்பட்டது. தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்ற அழிவில்லாத நித்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே பயன் என தமது திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளார். இந்த உண்மையை விளக்கும் விளக்கவுரையே நான் யார்.[1] புத்தகம் கீழ்க்கண்டவாறு தலைப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 1. நம் சொரூபமே ஆனந்தம்.
 2. விசாரணை செய்வது எப்படி?
 3. பிரித்து ஆறிதல்
 4. "நான் என்பதன் பொருள்"
 5. ஞானம்
 6. பயன்

நம் சொரூபமே ஆனந்தம்[தொகு]

இந்தத் தலைப்பில்

 1. நினைவும் நித்திரையும்
 2. மாப்பிள்ளை தோழன் கதை
 3. ஆனந்தமே நம் சொரூபம் என்ற மூன்று உள் தலைப்புகளில் ஞான விளக்கம் அளித்துள்ளார்.[1]

நினைவும் நித்திரையும்[தொகு]

ஒரு தொழில் அதிபர் தனது அன்றாட வாழ்க்கையில் உண்டு உறங்கிய பின்னாலே தன்னைப் பற்றிய நினைவு இருப்பதில்லை, ஆழ்ந்த உறக்கத்தில் மறந்தும் விழித்த பின் "நான்" "எனது" உணர்வு உதிக்கிறது. உறங்கும் போது "நான்" என்கிற உணர்வு எங்கே போகிறது. நான் யார்? என்ற கேள்விக்கு நெஞ்சறி விளக்கம் என்ற பாடலை மேற்கோள் காட்டியும், உபதேச உந்தியாரில் ஒரு பாடல் கருத்தை விளக்கம் அளித்துள்ளார்.[1]

மாப்பிள்ளை தோழன் கதை[தொகு]

ஒரு திருமண வீட்டில் தன்னை மாப்பிள்ளைத் தோழன் என்று கூறிக்கொண்டு பல வேலைகளைச் செய்து மரியாதையும், வேண்டிய பொருளும் அவனுக்குக் கிடைத்தது. திருமண நிகழ்ச்சி முடிந்து சம்பந்தி வீட்டார் பேசிக்கொள்ளும் சமயம், இளைஞனைப் பற்றி பேசி மாப்பிள்ளை வீட்டுப் பையன் என பெண்வீட்டாரும், பெண்வீட்டார் என மாப்பிள்ளை வீட்டாரும் நினைத்து இல்லை என தெரிந்து ஒருவருக்கொருவர் அதிர்ச்சியடைந்து அந்த இளைஞனைத் தேடிய போது கிடைக்காமல் மறைந்து போனான். அதுபோல "நான் யார்"? என்று விசாரணை செய்யாத வரை "நான்" என்கிற அகங்காரம் நம்மை அதிகாரம் செய்யும் என விளக்கமளித்துள்ளார்.[1]

ஆனந்தமே நம் சொரூபம்[தொகு]

நாம் ஒன்றை எதிர்பார்த்து செய்கிற காரியங்கள் நடக்காதபோது நமக்கு ஆனந்தமான வாழ்க்கை இல்லையே என விரக்தி அடைகிறோம். வினைப் பயன்கள் ஊடுருவும்போது எதிர்பார்த்த பலன்கள் அனைத்தும் மாறிவிடக் கூடும், அதற்காக "நம் வாழ்க்கையில் ஆனந்தமே இல்லை" என புலம்பக்கூடாது. என கீழ் வரும் பாடலை [2] மேற்கோள் காட்டி விளக்கம் அளிக்கிறார்.

மேலும் உள்ளது நாற்பதில் ஒரே வரியில் நான் யார்? என்னும் உண்மை விளக்கப் படுகிறது என்கிறார் இரமண மகரிசி அது

விசாரணை செய்வது எப்படி?[தொகு]

இந்தத் தலைப்பினுள்

 1. மகாகாசமும் கடாகாசமும்
 2. முயற்சி
 3. எப்படி விசாரணை செய்வது? என உப தலைப்பிட்டு ஞான விளக்கம் அளித்துள்ளார்.[1]

மகாகாசமும் கடாகாசமும்[தொகு]

நான் உதிப்பது எங்கிருந்து என்று கண்டுகொண்டால் "நான் உதியாது உள்ள நிலை நாம் அதுவாய் உள்ள நிலை" எது என்பது புரிந்துவிடும். "அதுவாய் உள்ள நிலை" என்பது பரமாத்ம சொரூபம்தான். உதாரணமாக ஆயிரம் குடங்களுக்குள் உள்ள வெற்றிடத்தில் இருப்பது ஆகாயம். பிரபஞ்சம் முழுவதும் உள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகிய நான்கையும் தன்னுள் அடக்கி பரந்து விரிந்து நிறைந்திருப்பதும் ஆகாயம். இந்த பரந்து விரிந்த ஆகாயத்தை மகாகாசம் என்றும், இந்த மண் குடங்களுக்குள் குறுகி இருக்கிற ஆகாயத்தை கடாகாசம் என்றும் கூறுகிறோம். மண் குடங்களுக்குள் உண்மையில் இருப்பது ஆகாயம் தான் மண் குடம் உடைந்தால் கடாகாசம் மகாகாசமாகிவிடும்.[1]

முயற்சி[தொகு]

உலகியலைச் சுற்றி வட்டமடிக்கிறது மனம். நம் உடல் தமோ குணசார்புள்ளது. இந்திரியங்கள் என்று சொல்லக்கூடிய ஐம்பொறிகளும், புலன் உணர்ச்சிகளும் ரஜோகுணமுடையது, மனம் சத்துவ குணமுடையது. ஆனால் உடல், இந்திரியங்களுடன் தொடர்பு கொண்டு பரபரக்கிறது. தன் மூலத்தைத் தேடி எழுகின்ற மனம் வழி தெரியாமல் எதிர் பாதையில் சென்று ஏமாறுகிறது, ஏமாற்றுகிறது, தவிக்கிறது. உடல் மற்றும் புலன்களிலிருந்து மனதை விடுவித்து மூலமான மெய்ப் பொருளுடன் இணைக்க தொடர்ந்து பயிற்சி, பயிற்சி வலுப்பெற கடுமையான முயற்சி தேவை.[1]

எப்படி விசாரணை செய்வது?[தொகு]

கைவல்ய நவநீதத்தில் தாண்டவராய சுவாமிகள் நான் யார்? என்கிற ஞான விசாரம் செய்வதற்கு ஒரு சூத்திரம் தருகிறார்.[3]

(சந்தேகம் தெளிதற் படலம்-பாடல்-63) இப்படியாக நான் யார்? என்கிற ஞான விசாரணை மூலமாக மெய்ப் பொருள் எது என்று அறிந்து பொய்ப் பொருட்களின் பிடியிலிருந்து விடுதலை பெறுகிறோம். இதை திருவள்ளுவர் குறள்-351ல் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.[4]

பிரித்து ஆறிதல்[தொகு]

இந்தத் தலைப்பினுள்

 1. மெய்ப் பொருளும்,பொய்ப்பொருளும்
 2. விசார மார்க்கம்
 3. இந்த உடல் மெய்ப்பொருளா? அல்லது பொய்ப்பொருளா? அதை நான் எனலாமா?
 4. இப்போது ஐம்பொறிகளை ஆராய்வோம்
 5. மனம் மெய்ப்பொருளா? அல்லது பொய்ப்பொருளா? அதை நான் எனலாமா?
 6. அறியாமை மெய்ப்பொருளா? அல்லது பொய்ப்பொருளா? அதை நான் என்று கூறலாமா? என உப தலைப்பிட்டு ஞான விளக்கம் அளித்துள்ளார்.[1]

"நான் என்பதன் பொருள்"[தொகு]

இந்தத் தலைப்பினுள்

 1. நான் யார்? என்பதன் விளக்கம்
 2. நான் இருக்கிறேன் (I am) என்கிற இருப்புணர்வாக (I know) ஆனந்தமாக இருப்பது எதுவோ அதுவே நான்என்பது உறுதிப்படும்

அகங்கார அழிவு என்றால் என்ன? திருமூலர் காட்டும் மதயானையும் மரமும் என உப தலைப்பிட்டு ஞான விளக்கம் அளித்துள்ளார்.[1]

ஞானம்[தொகு]

இந்தத் தலைப்பினுள்

 1. ஞானம்
 2. ஆத்மா அறிவு சொரூபம், என உப தலைப்பிட்டு ஞான விளக்கம் அளித்துள்ளார்.[1]

ஞானம்[தொகு]

தேகம் நான் என்கிற எண்ண வலையைத் தாண்டி ஆத்ம சொரூபமே நான்என்னும் இறுதிப்பாடு வருவதுதான் ஞானம் இதை தாண்டவராய சுவாமிகள் கைவல்ய நவநீதத்தில் [3] கீழ் கண்டவாறு கூறுகிறார்.

(சந்தேகம் தெளிதற் படலம்-பாடல்-174)

ஆத்மா அறிவு சொரூபம்[தொகு]

அறிவு சொரூபம் என்கிற போது அதில் மூன்று உண்மைகளான இருப்பு(சத்) சித் (அறிவு) ஆனந்தம்(துன்பமற்ற இன்பம்) என்ற தன்மைகள் இருக்கிறதோ? அந்த அறிவைப் பிடியுங்கள் இருப்பும் ஆனந்தமும் தானே விளங்கும் எனக் கூறுகிறார்.[5]

பயன்[தொகு]

புதிதாக ஞான விசாரணையில் இருக்கும் புதிய சாதகர்களுக்கு பரமாத்ம சொரூபமே தன் சொரூபம் என்கிற "உள்ளுறைப் பொருள்" ஒருவருக்குத் தெளிவாகும் [1]

சான்றாவணம்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 நான் யார்? தன்னிலை விளக்கம்.விஜயா பதிப்பகம், கோவை. பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "one" defined multiple times with different content
 2. அருணாச்சல ஸ்துதிபஞ்சகம்-ரமணாச்சரமம் வெளியீடு
 3. 3.0 3.1 வித்வான் M. நாராயண வேலுப்பிள்ளை எழுதிய கைவல்ய நவநீதம் முல்லை நிலையம் 2002-பதிப்பு.
 4. திருக்குறள்-திருவள்ளுவர்
 5. அருணாச்சல அட்சர மணமாலை-ரமணாச்சரமம் வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_யார்%3F_(நூல்)&oldid=2197661" இருந்து மீள்விக்கப்பட்டது