நான்சி சபோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்சி சபோத் Nancy Chabot
பிறப்பு1972
துறைகோள் அறிவியல்
இயற்பியல்
பணியிடங்கள்ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம், பயன்முறை இயற்பியல் ஆய்வகம்
கேசு மேற்குத் தனிப் பல்கலைக்கழகம்
நாசா
கல்வி கற்ற இடங்கள்இரைசு பல்கலைக்கழகம்
அரிசோனா பல்கலைக்கழகம்


நான்சி சபோத் (Nancy Chabot) (பிறப்பு: 1972) ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகப் ப்யன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் பணிபுரியும் ஒரு கோள் அறிவியலாளர் ஆவார்]].

வாழ்க்கைப்பணி[தொகு]

நான்சி சபோத் இயற்பியலில் தன் கலை இளவல் பட்டத்தை 1994 இல் இரைசு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.[1] இவர் தனது முனைவர் பட்டத்தைக் கோள் அறிவியலில் 1999 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் முனைவர் பட்டம் ஈட்டியதும் இலண்டன் அவுசுட்டனில் உள்ள ஜான் விண்வெளி மையத்திலும் பின்னர் கிளீவ்லாந்தில் உள்ள கேசு மேற்கு தனிப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார். இவர் 2995 இல் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகதின் பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் சேர்ந்தார்.

இவர் அண்டார்க்ட்டிக்கா வில் விண்கற்களைத் திரட்ட உருவாக்கிய ஆன்சுமெட் எனும் அண்டார்க்ட்டிக்கா விண்கல் தேட்டக் களவாய்வுக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்s.[2]இவருக்கு 2001 இல் அமெரிக்காவின் அண்டார்க்ட்டிக் பணிப்பதக்கம் வழங்கப்பட்டது.[3]

இவர் நாசாவின் மெசஞ்சர்(MESSENGER) திட்ட்த்தில் அறிவன்(புதன்) கோள் இரட்டைப் படிமவாக்கக் கருவி அறிவியலாளராகப் பணியாற்றினார். இவர் புவியியல் புலக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் அறிவன் கோள் இரட்டைப் படிமவாக்கக் கருவி அறிவியல் ஆய்வில் அக்கோளின் வட, தென் முனைகளில் அமைந்த பனி செறிந்த மொத்தல் குழிப்பள்ளங்களின் ஆய்வுக்குத் தலவராக விளங்கியுள்ளார். மேலும் இவர் 2008 ஜனவரி முதல் மெசஞ்சரின் முதல் பறப்புக்கலப் படிமங்களை வெளியீட்டுக்கும் தலைவராக உள்ளார்.[4]

இப்போது இவர் காம்மாக்கதிர்களையும் நொதுமிகளையும் கொண்டு செயல்படும் செவ்வாய்க் கோள் நிலாத் தேட்டம் சார்ந்த, ஜாக்சா செவ்வாய் நிலாத் தேட்டத் திட்டத்தின் இணைமுதன்மைக் கருவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.


இவர் நாசா டார்ட் எனும் இரட்டை விண்கல் திசைமாற்றச் சோதனைத் திட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் ஆவார்.

இவர் வானிலையியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார். மேலும் சிறுகோள் (6899) நான்சிசபோத் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள[தொகு]

  1. Chabot, Nancy. "JHUAPL - , Nancy, Chabot - Science Research Portal". secwww.jhuapl.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
  2. "MESSENGER Biographies". Archived from the original on 2014-02-21.
  3. Chabot, Nancy. "JHUAPL - , Nancy, Chabot - Science Research Portal". secwww.jhuapl.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
  4. "1,000th Featured Image from MESSENGER Posted on the Project's Web Gallery". Archived from the original on 2014-02-21.
  5. Nancy Chabot. "JHUAPL - , Nancy, Chabot - Science Research Portal". secwww.jhuapl.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_சபோத்&oldid=3588671" இலிருந்து மீள்விக்கப்பட்டது