உள்ளடக்கத்துக்குச் செல்

நான்கு தாள முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்கு தாள முறை அல்லது சௌதல் அல்லது சவ்தல், இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் " தால் "/"தாள" என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் இவை, வட இந்தியாவின் போஜ்புரி பிராந்தியத்தின் நாட்டுப்புறப் பாடலின் ஒரு இசை வடிவமாகும் , இது பக்வா அல்லது ஹோலி பண்டிகையின் போது பாடப்படுகிறது.

நான்கு தாள பாடல் முறையில் , பாடகர்கள் இரண்டு வரிசையில் அரைவட்ட முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, ஒரு முனையில் " டோலக் மத்தள இசைக்கருவியுடனும் , மறுமுனையில் பாடல் வரிகளை எதிரொலியாகவும் பாடுகிறார்கள். இந்த பாடலிசைகள்  ஒப்பீட்டளவில் எளிமையானவை என்றாலும், பாடல் பலவிதமான தாளம் மட்டும் சுதியில் அடங்கிய நிலையிலும், உச்சகட்ட நிலையிலும் என மாறி மாறி இசைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அவர்கள் மனநிலைமையை அதற்கேற்ப மாற்றும் திறன் கொண்டதாகும். பொதுவாக இவை இசைக்கலைஞர்களால் பார்வையாளர்களுக்காகப் பாடப்படாமல், தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகவே பெரும்பாலும்  பாடப்படுகிறது. "சௌதால்" அல்லது '''நான்கு தாள முறை''' என்பது இசைப்பாடல் வடிவத்திற்கான பொதுவான சொல்லாகும், இது முறையான தாளம், உள்ளரா லெஜ் பைஸ்வரா தமார் , கபீர் ஜோகிரா போன்ற பல்வேறு துணை வகைகள் அடங்கியுள்ளன. போஜ்புரி பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில்  இன்றும் இம்முறையில் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டாலும் அவை பெருமளவில் இல்லை என்பதே நிதர்சனம்.

1838-1917 ஆம் ஆண்டில், கரீபியன் (முதன்மையாக டிரினிடாட் மற்றும் டொபாகோ, கயானா மற்றும் சுரினாம் ), பிஜி, ஜமைக்கா, மொரிஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களால் கடத்தப்பட்ட போஜ்புரி நாட்டுப்புற இசை வகைகளில் இதுவும்  ஒன்றாகும். டிரினிடாட் மற்றும் கயானாவில் போஜ்புரி மொழியின் வீழ்ச்சி இருந்தபோதிலும், இசைத்தளத்தில் இந்த வகை பாடல் முறைகள் அது தீவிரமாக வளர்ந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  • மானுவல், பீட்டர் (2009). "நாடுகடந்த சௌதல்: போஜ்புரி நாட்டுப்புற பாடல் வட இந்தியாவிலிருந்து கரீபியன், பிஜி மற்றும் அதற்கு அப்பால்." ஆசிய இசை 40/2: 1-32
  • மானுவல், பீட்டர் (2010). "டஸ்ஸா தண்டர்: ஃபோக் மியூசிக் ஃப்ரம் இந்தியா டு தி கரீபியன்." ஆவணப்பட வீடியோ.
  • சசெனரைன், ரூடி, தொகுப்பாளர் (2009). "சௌதல் ரங் பஹார்: இந்தியா மற்றும் கரீபியனில் இருந்து சௌதல் பாடல்களின் கருவூலம்." குயின்ஸ், நியூயார்க்: ராஜகுமாரி மையம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_தாள_முறை&oldid=3657219" இலிருந்து மீள்விக்கப்பட்டது