நான்கு சரணங்கள் (சார் பேட்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார் பேட் என்பது பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குழுவால் நிகழ்த்தப்படும் 400 ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரிய கலை நிகழ்ச்சியாகும், சார் பேட் என்பதற்கு நான்கு சரணங்கள் என்பதே அர்த்தமாகும். இது நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் ஒரு வடிவமாகும். இன்றளவும் முக்கியமாக ராம்பூர் (உத்தர பிரதேசம்), டோங்க் (ராஜஸ்தான்), போபால் (மத்திய பிரதேசம்) மற்றும் ஹைதராபாத் (ஆந்திர பிரதேசம்) ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.[1] சங்கீத நாடக அகாடமி இதை ஒரு பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவமாக அங்கீகரித்துள்ளது.

தோற்றம்[தொகு]

சார் பேட் என்ற வார்த்தையின் தோற்றம் பாரசீக மொழியில் இருந்து தோன்றியுள்ளதை எளிதாக அறியலாம். ஏனெனில் அங்கு அது நான்கு-சரணங்கள் கொண்ட கவிதையைக் குறிக்கிறது, மட்டுமல்லாமல் ஒவ்வொரு சரணமும் நான்கு வரிகளால் ஆனது. அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த டாஃப் என்ற தாள வாத்தியத்துடன் இந்த வகை கவிதை பாடப்படுகிறது. [1] இந்த கவிதை வடிவம் அரேபியாவில் 7 ஆம் நூற்றாண்டில் இருந்தே ராஜீஸ் என்ற பெயருடன் உள்ளது. [2] இந்த கலை வடிவம் பெர்சியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டது . முகலாய இராணுவத்தில் பணியாற்றிய ஆப்கானியர்கள் இந்த கலையை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர் என்பதை பெரும்பாலும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் .

தொகுப்பு[தொகு]

ஆரம்பத்தில், இந்த கவிதைகள் பாரசீக மற்றும் பஷ்து மொழிகளில் இயற்றப்பட்டாலும் பின்னர் அது உருது மொழியிலும் கூட  இயற்றப்பட்டது. அப்படியாக இதன் தன்மை படிப்படியாக உள்ளூர் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டு அதனுள் உட்பொதிக்கப்பட்டது அதுமட்டுமல்லாமல் பழங்குடி மற்றும் நாட்டுப்புற மக்களிடமிருந்து அதன் பழமொழிகளை கடன் வாங்கத் தொடங்கி இந்த கவிதை வடிவத்தில் உள்வாங்கியது. "சார் பேட்" கவிதை உருது கஜலின் அதே உணர்வுப்பூர்வமான தன்மையை நான்கு வரிகளிலும், அதன் நான்கு சரணங்களிலும் வெளிப்படுத்துகிறது.

தற்போதைய கலைஞர் குழுக்கள்[தொகு]

  • உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூரில் இருந்து பாப்பன் சுல்தானி இசை நிகழ்ச்சி.
  • ராஜஸ்தானின் டோங்கில் இருந்து பாட்ஷா கான் மற்றும் குழு.
  • மசூத் ஹஷ்மி மற்றும் குழுவினர் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலைச் சேர்ந்தவர்கள்.
  • தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இருந்து சில உள்ளூர் குழுக்கள். [3]

கலையின் சாரம்[தொகு]

பொதுவாக, சார் பேட் என்பது போர், வீரம், காதல் மற்றும் சில சமயங்களில் ஆன்மீகம் பற்றி விவரிக்கும் நான்கு சரணங்களைக் கொண்ட ஒரு நீண்ட கவிதையாகும். ஆரம்ப காலகட்டத்தில் இது சூஃபி ஆன்மீகத்தின் கருப்பொருளைக் கொண்டிருந்தது, பின்னர் படிப்படியாக சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றிய கருப்பொருளின் மேலாதிக்கம் ஓங்கி கவிதைகளில் வெளிப்பட தொடங்கியது.

மேற்கோள்கள்[தொகு]