நான்கி காளி திட்டம்
நான்கி காளித் திட்டம் (Project Nanhi Kali) என்பது இந்தியாவில் பின்தங்கிய பெண்களுக்கான கல்வியை வழங்கும் ஓர் இந்திய அரசு சாரா அமைப்பாகும்.[1][2]
வரலாறு
[தொகு]1996ஆம் ஆண்டு ஆனந்த் மகிந்திராவால் நிறுவப்பட்ட இது, நான்டி அறக்கட்டளை மற்றும் மகிந்திரா குழுமத்தின் பெருநிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கே. சி. மகிந்திரா கல்வி அறக்கட்டளை ஆகியவற்றால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது.[3]
பின்னணி
[தொகு]இந்தியாவில் நீண்ட காலத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வழியாகப் பெண்கள், பெண்களுக்குக் கல்வி வழங்குவதை நான்கி காளி திட்டம் பார்க்கிறது. இலாப நோக்கற்ற அமைப்பின் தலைவரான சீத்தல் மேத்தா, டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிசுக்கு அளித்த பேட்டியில், "நாட்டில் இளம் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்பினோம்" என்று கூறினார்.
நான்கி காளிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நிதி மற்றும் கல்வி உதவி இரண்டையும் பெறுகிறார்கள். இவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளச் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். எழுதுபொருள், குறிப்பேடுகள், பள்ளிப் பைகள், சீருடைகள், உடைகள், காலணிகள் உள்ளிட்ட அவர்களின் கல்விக்கான சந்தர்ப்பச் செலவுகளுக்காக நான்கி காளி உதவுகிறது.[3] நிதியுதவி தனிநபர் மற்றும் நிறுவன நன்கொடையாளர்களிடமிருந்து வருகிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட குழந்தைக்கு நிதியுதவி செய்கிறார்கள். நிதியுதவி அளிக்கும் நபர்கள் பள்ளியில் அக்குழந்தையின் கல்வி முன்னேற்றம் குறித்த வழக்கமான தகவல்களைப் பெறுகிறார்கள். ஒரு மாணவருக்கான குறிப்பிட்ட பொருட்களை வழங்க நிதியாளர்கள் இணைய "பரிசு கடைக்கு" செல்லலாம்.[4] மகிந்திரா குழுமம், நான்கி காளி திட்டத்தின் மூலம் 22,000 பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி செய்கிறது.[5]
மூன்றாம் தரப்பு மதிப்பீடுகள், நான்கி காளி சிறுமிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் காட்டுகின்றன. ஒரு வருட காலப்பகுதியில், நான்கி காளி மாணவர்களின் கற்றல் மேம்பாடு பழங்குடி சத்தீசுகரில் 40 சதவீதமாகவும் மும்பையில் 78 சதவீதமாகவும் இருந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Waldie, Paul (2011-02-18). "A school trip turns into a fundraising drive". The Globe and Mail இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024093641/http://www.theglobeandmail.com/report-on-business/managing/giving-back/a-school-trip-turns-into-a-fundraising-drive/article1913652/. பார்த்த நாள்: 2011-02-19.
- ↑ "Adlabs Cinemas roots for girl child education via CSR initiative". 2008-09-13 இம் மூலத்தில் இருந்து 2011-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110708105117/http://www.businessofcinema.com/news.php?newsid=9894. பார்த்த நாள்: 2011-02-19.
- 1 2 3 "About Nanhi Kali". NanhiKali.org. 2007. Archived from the original on 2011-07-27. Retrieved 2011-02-18.
- ↑ "Nanhi Kali Organization Helps Girls Get an Education in India with 'A Girl Store'". Huffington Post. 2011-01-28. Archived from the original on 2011-01-31. Retrieved 2011-02-18.
- ↑ "Project Nanhi Kali". mahindra.com. 2011. Archived from the original on 2011-07-14. Retrieved 2011-02-18.