நான்காம் விஷ்ணுவர்தனா
தோற்றம்
| நான்காம் விஷ்ணுவர்தனா | |
|---|---|
| ஆட்சிக்காலம் | கி.பி. 772–808 |
| முன்னையவர் | முதலாம் விஜயாதித்யா (கி.பி.755–772) |
| பின்னையவர் | இரண்டாம் விஜயாதித்யா(கிபி 808–847) |
| துணைவர் | சிலபத்தாரிகா |
| குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் விஜயாதித்யா (கிபி. 808–847) |
| அரசமரபு | கீழைச் சாளுக்கியர் |
நான்காம் விஷ்ணுவர்தனா (Vishnuvardhana IV) கிழக்கு சாளுக்கியர்களின் பத்தாவது மன்னராக இருந்தார், இவர் வேங்கி பிராந்தியத்தை ஆட்சி செய்தார். கிபி 772 முதல் கிபி 808 வரை ஆட்சி செய்தார். ஏகாதிபத்திய இராட்டிரகூடர்களுடன் இவர் இராணுவ உறவுகளைக் கொண்டிருந்தார். இராட்டிரகூட பேரரசர் துருவன் தரவர்சன் தனது மகள் சிலபத்ரிகாவை நான்காம் விஷ்ணுவர்தனாவுக்கு திருமணம் செய்து வைத்து, 784 ஆம் ஆண்டில் மேற்கு கங்கா வம்சத்துடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.[1] இவருக்கு முன்னோடியாக இருந்தவர் முதலாம் விஜயாதித்யா (கிபி 755-772) ஆவார். இவருக்குப் பின்னால் இரண்டாம் விஜயாதித்யா, (கிபி 808-847) ஆட்சிப் பொறுப்பேற்றார்.[2]