நான்காம் விக்ரகராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் விக்ரகராசன்
நான்காம் விக்ரகராசனின் காலத்திய நாணயம்
சாகம்பரியின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 1150-1164 பொ.ச.
முன்னையவர்ஜகதேவன்
பின்னையவர்அமரகங்கேயன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைஅர்னோராசன்
Map
நான்காம் விக்ரகராசனின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

நான்காம் விக்ரகராசன் (Vigraharaja IV) (ஆட்சி சுமார் 1150-1164 பொ.ச.), விசாலதேவன் என்றும் அழைக்கப்படும் இவர் வடமேற்கு இந்தியாவின் சகமான அரசர் ஆவார். ஏறக்குறைய அனைத்து அண்டை நாட்டு மன்னர்களையும் அடக்கியதன் மூலம் சகமான சாம்ராச்சியத்தை ஒரு பேரரசாக மாற்றினார். இவரது இராச்சியம் இன்றைய இராஜஸ்தான், அரியானா மற்றும் தில்லியின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. மேலும், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும் இருந்திருக்கலாம்.

விக்ரகராசன் தனது தலைநகரான அஜயமேருவில் (நவீன அஜ்மீர் ) பல கட்டிடங்களை நிறுவினார். அவற்றில் பெரும்பாலானவை அஜ்மீரை முஸ்லிம்கள் கைப்பற்றிய பிறகு அழிக்கப்பட்டன அல்லது முஸ்லிம் கட்டிடங்களாக மாற்றப்பட்டன. இவை சமசுகிருத கற்றல் மையத்தை உள்ளடக்கியது. பின்னர் அது அதாய் டின் கா ஜோன்ப்ரா பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. விக்ரகராசன் எழுதிய சமசுகிருத மொழி நாடகமான ஹரகேலி நாடகம், பள்ளிவாசல் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

விக்ரகராசன் சகமான மன்னன் அர்னோராசனுக்கு பிறந்தார். விக்ரகராசனின் மூத்த சகோதரரும் முன்னோடியுமான ஜகத்தேவன் தனது தந்தையைக் கொன்றார். இவர்களது ஒன்றுவிட்ட சகோதரர் சோமேசுவரன், குசராத்தில் அவரது சோலாங்கிய தாய்வழி உறவினர்களால் வளர்க்கப்பட்டார். தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்க ஜகத்தேவனைக் கொன்ற பிறகு விக்ரகராசன் அரியணை ஏறியிருக்கலாம். [1]

பிசல்பூரில் உள்ள பிசல்தேவன் கோயில் விக்ரகராசனால் கட்டப்பட்டது

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_விக்ரகராசன்&oldid=3425805" இலிருந்து மீள்விக்கப்பட்டது