நான்ஃபாதிமா மகசௌபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான்ஃபாதிமா மகசௌபா (Nanfadima Magassouba ) இவர் கினிய பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணியின் தலைவராகவும் இருந்தார். [1] மேலும் 2013 முதல் கினியாவின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

வாழ்க்கை[தொகு]

மகசௌபா கௌண்டரா மாகாணத்தில் பிறந்தார். [2] இவர் முப்பதாண்டுகளாக தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக குழுக்களுடன் பணியாற்றிய போதிலும், அவர் கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணியின் தலைவராக பரந்த அங்கீகாரத்திற்கு வந்தார். மகசௌபாவின் தலைமையின் கீழ், கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணி முன்னணி பெண்கள் உரிமை அமைப்பாக தேசிய அந்தஸ்தைப் பெற்றது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவாவும் அங்கீகரிக்கப்பட்டது. [3]

பதவிகள்[தொகு]

2013 தேர்தலில் இவர் கினிய மக்களின் பேரணிக்கான தேசிய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் கினியாவில் தேசிய ஒற்றுமை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்துள்ளார். [4] 2015 கினிய ஜனாதிபதித் தேர்தலில் கௌண்டாராவில் ஆல்பா கான்டெஸ் வெற்றியை உறுதி செய்த பெருமைக்குரியவரான [5] மகசௌபா கௌண்டாராவில் காணக்கூடிய கினிய மக்களின் பேரணிக்கான 2016 சூனில், கினிய மக்களின் பேரணி கூட்டணி பிரதிநிதிகள் ஆணையத்தின் தலைவராக மமடி தியாவாராவுக்குப் பிறகு இவர் நியமிக்கப்பட்டார். [6]

பணிகள்[தொகு]

2017 மே மாதத்தில் யேல் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க அரசியல் தலைவர்களுக்கான நாலாவது மன்றத்தில் மகசௌபா பங்கேற்றார். [7]

மகசௌபா மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலையமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். [6] 2016 சூலையில் கினியாவின் ஜனநாயகப் படைகளின் ஒன்றியத்தின் படௌமதா பிண்டா டயல்லோ வெற்றிபெறுவதற்கு முன்பு. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராக, கினியாவில் பலதார மணம் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2018 திசம்பர் 29, அன்று, பாராளுமன்றத்தின் அனைத்து 26 பெண் உறுப்பினர்களுடனும், [8] பலதாரமணத்தை சட்டப்பூர்வமாக்கிய குடிமை சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிக்க மகசௌபா மறுத்துவிட்டார். [9] இது 1968 முதல் தடைசெய்யப்பட்டது:

குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்ஃபாதிமா_மகசௌபா&oldid=2934400" இருந்து மீள்விக்கப்பட்டது