நானோலேமினேஷன் - அடுக்கு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
   நானோசலேமினேஷன் என்பது முழுமையான அடர்த்தியான மிகச்சிறந்த திடப்பொருளின் தயாரிப்பாகும். இது குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.

நானோசலேமினேஷன் செய்யும் முறை

  நானோசலேமினேஷன் என்பது ஒரு பொருளின் மீது அணு அணுவாக அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதாகும்.

மின் குறைப்பு

  மின்குறைப்பு முறையில் உலோகங்கள் உலோக கலவைகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது. இதன்மூலம் எற்படுத்தப்படும் நானோசலேமினேஷன் அடுக்கு பொருளின் கடினத்தன்மை வலிமை, வெப்பம் தாங்கும் திறனை அதிகரிக்கிறது. இது பல உலோக அயனிக்கூறுகளைப் பிரித்து படிய வைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. கொடுக்கப்படும் மின்சார அளவை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு உறுப்புகளைத் தேர்ந்தெடுத்து நானோசலேமினேஷன் உருவாக்க முடியும். உருவாக்கப்படும் அடுக்கு அமைப்பின் தடிமன் 1 செ.மீ வரை இருக்கும். உயர்ந்த விலை பொருட்களின் நன்மையை அடுக்கு அமைப்பு நானோசலேமினேஷன் மூலம் குறைவான விலையில் வழங்கமுடியும். உயர்ந்த விலைப்பொருட்களின் வலிமையை ஒத்த பண்புகளை குறைந்த செலவிலான அடுக்கு அமைப்பு மூலம் ஏற்படுத்த முடியும். 2010ம் ஆண்டு வாக்கில் வர்த்தக உற்பத்தி Modumental என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அணு அடுக்குப்படிவு

  இயற்பியில், வேதியியல், மின்னணு பண்புகளைக் கொண்ட அணு அடுக்குப்படிவு வீரியமிக்க மெல்லிய ஆக்ஸைடுகளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. உதாரணமாக கரடுமுரடான ஆக்ஸைடு அடுக்கின் மீது மென்மையான ஆக்ஸைடு அடுக்கு பூசப்பட்டு தேவையான மேற்பரப்பு உருவாக்கப்படுகிறது. அணு அடுக்குப் படிவத்தின் பண்பு நானோசலேமினேஷன் செய்யப்படும் வெப்பநிலை மற்றம் குணகத்தை பொறுத்து அமையும்.

செயல்திறன்

  ஆட்டோகிளாஸ் சோதனையில் அடுக்கு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பொருட்களின் தாங்கும் திறன் கார்பன் இரும்புகளின் தாங்கும் திறனை விட 8 முறை அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில சோதனையில் இதற்கு அழிவே இல்லை என்ற கூறப்பட்டுள்ளது.

பயன்பாடு

  அடுக்கு அமைப்பின் பயன்பாடு ஆற்றல் சேமிப்பு மற்றும் மின் தேக்கிகளுக்கான சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் மற்றம் பரிவாயு

  அரிப்பு-எதிர்ப்பு குழாய் அமைப்பு மேல் உறை போன்றவை எண்ணெய் மற்றும் பரிவாயு துறையில் முக்கியிமானவை. குழாய் மற்றும் மேல் உறைகள் அதிக அரிக்கும் தன்மை வாய்ந்த சூழ்நிலையில் அதிக வெப்பநிலையில் தாங்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். Modumental நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குழாய், வால்வுகள் போன்றவற்றை அடுக்கு அமைப்பு முறையில் வழங்குகிறது.

மிண்ணணுவியல்

  அடுக்கு அமைப்பு மின்காப்புப் பொருள் மற்றும் மின் கடத்தா பொருள்களின் அதிக காப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. மின்னாற் பகுப்பு முறையிலும் அடுக்கு அமைப்பு உருவாக்கப்படுகிறது.