நானோபைரசு
Appearance
நானோபைரசு | |
---|---|
†நானோபைரசு குந்தேரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றன
|
குடும்பம்: | டைகுரோகுளோசிடே
|
பேரினம்: | நானோபைரசு குந்தர், 1869
|
மாதிரி இனம் | |
நானோபைரசு சிலோனென்சிசு குந்தர், 1869 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
நானோபைரசு (Nannophrys) என்பது இலங்கையில் மட்டும் காணக்கூடிய தவளை பேரினமாகும். இது பெரிய தவளை குடும்பமான இராணிடேயில் வைக்கப்பட்டது. ஆனால் டி. என். ஏ. வரிசைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இன உறவு முறை ஆய்வின் முடிவில் இப்போது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை சில நேரங்களில் மெலிந்தஉடல் தவளைகள் என்ற பொதுவான பெயரில் அறியப்படுகின்றன.[1][2]
சூழலியல்
[தொகு]நானோபைரசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினத் தவளைகள் தட்டையான உடலினைக் கொண்டுள்ளன. இவை தெளிவான நீர் ஓடைகளுக்கு அருகே குறுகிய, கிடைமட்ட பாறை பிளவுகளுக்கு இடையில் வாழ்கின்றன.[3]
இனங்கள்
[தொகு]இப்பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை:[1][4]
- நானோபைரசு சிலோனென்சிசு குந்தர், 1869
- †நானோபைரசு குந்தேரி பெளலெஜ்சர், 1882 (அழிந்து விட்டது)
- நானோபைரசு மர்மோராடா கிர்திசின்கே, 1946
- நானோபைரசு நாயேகை பெர்னாண்டோ, விக்கிரமசிங்க மற்றும் ரொட்ரிகோ, 2007
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Frost, Darrel R. (2015). "Nannophrys Günther, 1869". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
- ↑ Vences, M.; Wanke, S.; Odierna, G.; Kosuch, J.; Veith, M. (2000). "Molecular and karyological data on the south Asian ranid genera Indirana, Nyctibatrachus and Nannophrys (Anura: Ranidae)". Hamadryad 25 (2): 75–82. http://www.mvences.de/p/p2/Vences_B57.pdf.
- ↑ Senevirathne, Gayani; Meegaskumbura, Madhava (2015). "Life among crevices: osteology of Nannophrys marmorata (Anura: Dicroglossidae)". Zootaxa 4032 (2): 241–245. doi:10.11646/zootaxa.4032.2.12. பப்மெட்:26624358.
- ↑ "Dicroglossidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.