நானி பட்டாச்சார்யா
நானி பட்டாச்சார்யா | |
|---|---|
| பாராளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
| பதவியில் 1989-1993 | |
| முன்னையவர் | அடிசு சந்திர சின்கா |
| பின்னவர் | பிரமோதெசு முகர்ஜி |
| தொகுதி | பகரம்பூர் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1967-1969, 1977-89 | |
| தொகுதி | அலிபுர்துவார்ஸ் சட்டமன்றத் தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1962-1967 | |
| முன்னையவர் | அனிமா ஓரே (இந்திய தேசிய காங்கிரசு) |
| பின்னவர் | டெனிஸ் லாக்ரா (இந்திய தேசிய காங்கிரசு) |
| தொகுதி | கால்ச்சினி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 6 நவம்பர் 1917 காக்ரா, மூர்சிதாபாத் |
| இறப்பு | 11 அக்டோபர் 1993 (வயது 75) |
| அரசியல் கட்சி | புரட்சிகர சோசலிசக் கட்சி |
| முன்னாள் மாணவர் | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் (இளங்கலை) |
நானி பட்டாச்சார்யா (Nani Bhattacharya) (1917-1993) புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர் ஆவார். இவர் தொழிற்சங்க ஆர்வலர், மேற்கு வங்காளத்தில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
ஆரம்ப நாட்களில்
[தொகு]நானி பட்டாச்சார்யா காளிதாஸ் பட்டாச்சார்யாவிற்கு 1917 [1] ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள காக்ராவில் பிறந்தார். ஜியாகஞ்ச் பள்ளியில் தனது பள்ளி இறுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உயர்கல்வியை முடித்தார்.[2] பஹரம்பூரில் உள்ள அர்னகலி டோலில் சில காலம் படித்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கையில், இவர் அனுசீலன் சமித்தியின் உறுப்பினராக இருந்தார். 1940 இல், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியை நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.[2]
தேசியப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, இவர் 1936-38 காலகட்டத்தில் மற்றும் 1940-46 காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பல சந்தர்ப்பங்களில் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]
தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் அரசியல்
[தொகு]இரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தின் வளர்ச்சியைத் தவிர, இவர் டோர்ஸில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே பணியாற்றினார். இவர் டோர்ஸ் சா பாகன் தொழிலாளர் சங்கத்துடன் தொடர்புடையவர்.[2]
நானி பட்டாச்சார்யா 1967,[3] 1969,[4] 1977,[5] 1982,[6][7] மற்றும் 1987 ஆம் ஆண்டில் அலிபுர்துவார்ஸ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1989 மற்றும் [8][9] 1991 ஆம் ஆண்டுகளில் பஹரம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
1967, 1969 மற்றும் 1977-82 ஆம் ஆண்டுகளில் இவர் மேற்கு வங்காளத்தில் சுகாதார அமைச்சராகவும், 1982-87 ஆம் ஆண்டில் மாநிலத்தில் நீர்ப்பாசன அமைச்சராகவும் இருந்தார்.[1]
1989-ஆம் ஆண்டில் புரட்சிகர சோசலிசக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார்.[1]
இறப்பு
[தொகு]இவர் [2] 1993-ஆம் ஆண்டு அக்டோபரில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Members of Parliament – Lok Sabha - Profile". Bhattacharya, Shri Nani. refocus india. Archived from the original on 14 ஜூலை 2014. Retrieved 11 July 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 Samsad Bangali Charitabhidhan (Biographical Dictionary) by Anjali Bose, Vol II, 3rd edition 2004, page 146, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86806-99-7ISBN 81-86806-99-7, (in Bengali) Sishu Sahitya Samsad Pvt. Ltd., 32A Acharya Prafulla Chandra Road, Kolkata-700009
- ↑ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 11 July 2014.
- ↑ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 11 July 2014.
- ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 11 July 2014.
- ↑ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 18 June 2014.
- ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Retrieved 18 June 2014.
- ↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 11 July 2014.
- ↑ "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 11 July 2014.