உள்ளடக்கத்துக்குச் செல்

நானா அகுபோ-அடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேன்மை தங்கிய
நானா அகுபோ-அடோ
2020 ஆம் ஆண்டில் அகுபோ-அடோ
கானாவின் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சனவரி 2017
Vice Presidentமகாமுடு பாவுமியா
முன்னையவர்ஜான் டிராமணி மகாமா
மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் 35 ஆவது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூன் 2020
முன்னையவர்மகாமடௌ ஐசௌபு
கானா வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 2003 – 1 சூலை 2007
குடியரசுத் தலைவர்ஜான் குபோர்
முன்னையவர்ஆக்மேன் ஓவுசு- அகிமேன்
பின்னவர்அக்வாசி ஓசெய்-அட்ஜெய்
கானாவின் சட்டத்துறைத் தலைவர்
பதவியில்
7 சனவரி 2001 – 1 ஏப்ரல் 2003
குடியரசுத் தலைவர்ஜான் குபோர்
முன்னையவர்ஓபெட் அசாமோ
பின்னவர்பாபா ஓவுசு-அங்கோமா
நாடாளுமன்ற உறுப்பினர்
அகிம் அபுவாக்வா தெற்கு (கானா நாடாளுமன்றத் தொகுதி)
பதவியில்
7 சனவரி 2005 – 7 சனவரி 2009
முன்னையவர்புதிய நாடாளுமன்றத் தொகுதி
பின்னவர்சாமுவேல் அட்டா அகேயா
நாடாளுமன்ற உறுப்பினர்
அக்யேம் அபுவாக்வா
பதவியில்
7 சனவரி 1997 – 8 திசம்பர் 2004
முன்னையவர்புதிய நாடாளுமன்றத் தொகுதி
பின்னவர்நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வில்லியம் அடோ டான்க்வா அகுபோ-அடோ

29 மார்ச்சு 1944 (1944-03-29) (அகவை 80)
அக்ரா, பிரித்தானிய காலனிய தங்கக் கடற்கரை(தற்போதைய கானா)
அரசியல் கட்சிபுதிய தேசபக்த கட்சி
துணைவர்ரெபெக்கா அகுபோ அடோ
பிள்ளைகள்5 மகள்கள்
வாழிடம்ஜுபிளி இல்லம்
கல்விலான்சிங் கல்லூரி
நியூ கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
கானா பல்கலைக்கழகம்
சிட்டி சட்டக் கல்லூரி
இணையத்தளம்Campaign website

நானா அடோ டான்க்வா அகுபோ அடோ (Addo Dankwa Akufo-Addo) a-KUUF-oh-_-ah ;[1] பிறப்பு 29 மார்ச் 1944) கானாவின் தற்போதைய குடியரசுத்தலைவரான கானா அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 7 சனவரி 2017 முதல் பதவியில் இருக்கிறார்.[3] முன்னதாக இவர் 2001 முதல் 2003 வரை அட்டர்னி ஜெனரலாகவும், 2003 முதல் 2007 வரை குஃபூர் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் .[4] இவர் தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் (ECOWAS) தலைவராகவும் உள்ளார்.[5]

நானா அடோ முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவராகவும், 2012 ஆம் ஆண்டில் மீண்டும் புதிய தேசபக்த கட்சியின் (என்.பி.பி) வேட்பாளராகவும் போட்டியிட்டார். தேசிய ஜனநாயக காங்கிரசின் வேட்பாளர்களால் இவர் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தோற்கடிக்கப்பட்டார்: 2008 ஆம் ஆண்டில் ஜோன் எவன்ஸ் அட்டா மில்ஸ் மற்றும் மில்ஸின் மரணத்திற்குப் பிறகு 2012 இல் ஜான் டிராமணி மகாமா ஆகிய இருவரிடமும் தோல்வியடைந்தார். இரண்டாவது முறை தனது தோல்வியை இவர் ஒப்புக்கொள்ள மறுத்து நீதிமன்றத்திற்குச் சென்றார். கானாவின் உச்ச நீதிமன்றம் ஜான் டிராமணி மகாமாவின் வெற்றியை உறுதிப்படுத்தியது.[6] 2016 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான மூ. இந்த முறை இவர் முதல் சுற்றில் ஜான் டிராமணி மகாமாவை தோற்கடித்து, (53.85% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்). கானாவின் குடியரசுத்தலைவரர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முதல் சுற்றில் பெரும்பான்மையை வென்றது முதல் முறையாக குறிக்கப்பட்டது.[7] இவர் மீண்டும் 2020 பொதுத் தேர்தலின் முதல் சுற்றில் (51.59% வாக்குகளைப் பெற்று) ஜான் டிராமணி மகாமாவைத் தோற்கடித்தார்.[8]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

நானா அடோ டன்க்வா அகுபோ-அடோ 29 மார்ச் 1944 அன்று கானாவின் ஸ்வாலாபா அக்ராவில் ஒரு முக்கிய கானா அரச மற்றும் அரசியல் குடும்பத்தில் எட்வர்ட் மற்றும் அட்லைன் அகுபோ-அடோ ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[9] அக்ரோபாங்-அகுவாபெம் தொடங்கிய வரிசையில் இவரது தந்தை எட்வர்ட் அகுபோ-அடோ 1966 முதல் 1970 முடிய உள்ள காலகட்டத்தில் கானாவின் மூன்றாவது பிரதம நீதியரசராகவும், 1967-68 காலத்தில் அரசியலமைப்பு ஆணைக்குழுவின் தலைவராகவும், மற்றும் 1970 முதல் 1972 வரை செயல்தகுதியில் அல்லாத அதிபராகவும் இருந்தார். அகுபோ-அடோவின் தாய்வழி தாத்தா, கானா சுதந்திரத்திற்கு முன்பு தங்கக் கடற்கரையின் ஆளுநரின் செயற்குழு உறுப்பினராக இருந்த அகீம் அபுவக்வாவின் மன்னர் நானா சர் ஓஃபோரி அட்டா ஆவார். இவர் கோஃபி அசாந்தே ஓஃபோரி-அட்டா மற்றும் வில்லியம் ஓஃபோரி அட்டா ஆகியோரின் மருமகன் ஆவார். தி பிக் சிக்ஸின் மற்றொரு உறுப்பினரான ஜே.பி. டான்குவா இவரது பேரன் ஆவார்.

தனது ஆரம்பக் கல்வியை அடாபிரகாவில் உள்ள அரசு சிறுவர் பள்ளியில் தொடங்கினார், பின்னர் அக்ரா சென்ட்ரலில் உள்ள ரோவ் ரோடு பள்ளிக்கு (இப்போது கின்பு ) சென்றார். சசெக்ஸின் லான்சிங் கல்லூரியில் தனது ஓ-லெவல் மற்றும் ஏ-லெவல் தேர்வுகளுக்கு படிக்க இங்கிலாந்து சென்றார், அங்கு அவருக்கு 'பில்லி' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.[1] இவர் 1962 இல் ஆக்ஸ்போர்டில் உள்ள புதிய கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார பாடத்திட்டத்தைத் தொடங்கினார், ஆனால் விரைவில் அங்கிருந்து வெளியேறினார்.[10] 1964 ஆம் ஆண்டில் லெகோனில் உள்ள கானா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்கச் செல்வதற்கு முன், 1962 இல் அக்ரா அகாடமியில் கற்பிப்பதற்காக கானா திரும்பினார், 1967 இல் பிஎஸ்சி (பொருளாதாரம்) பட்டம் பெற்றார். பின்னர் அவர் இன்னர் டெம்பிளில் சேர்ந்தார் மற்றும் இன்ஸ் ஆஃப் கோர்ட் என்று அழைக்கப்படும் பயிற்சி முறையின் கீழ் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார், அங்கு முறையான சட்ட பட்டம் தேவையில்லை.[11] சூலை 1971 இல் இவர் ஆங்கில வழக்கறிஞர் கழகத்திற்கு ( மிடில் டெம்பிள் ) அழைக்கப்பட்டார். சூலை 1975 இல் இவர் கானா வழக்கறிஞர் கழகத்திற்கு அழைக்கப்பட்டார். அகுபோ-அடோ அமெரிக்க சட்ட நிறுவனமான கோடர்ட் பிரதர்ஸின் பாரிஸ் அலுவலகத்தில் பணிபுரிந்தார். 1979 ஆம் ஆண்டில், இவர் பிரேம்பே அண்ட் கோ என்ற சட்ட நிறுவனத்தின் இணை நிறுவனரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "OL Elected President of Ghana". lancingcollege.co.uk. 22 December 2016. Archived from the original on 11 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
  2. "COVID-19: Nana Addo joins world leaders in signing People's Vaccine". Citinewsroom - Comprehensive News in Ghana, Current Affairs, Business News, Headlines, Ghana Sports, Entertainment, Politics, Articles, Opinions, Viral Content (in அமெரிக்க ஆங்கிலம்). 16 May 2020. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  3. Osei Boakye, Evans (7 January 2017). "Nana Akufo Addo Is the New President for Ghana – Here's His Inauguration Speech". GhanaStar. Archived from the original on 8 January 2017. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
  4. "Nana Addo Dankwa Akufo-Addo Profile". GhanaWeb. Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  5. "President Akufo-Addo elected chairman of ECOWAS". Graphic Online (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
  6. "Nana Akufo-Addo". akufoaddo2012.com. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.
  7. "World Digest: Dec. 9. 2016: Ghana president concedes to opposition leader". தி வாசிங்டன் போஸ்ட். Archived from the original on 11 December 2016. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
  8. Frimpong, Enoch Darfah. "Akufo-Addo elected president of Ghana for second term with 51.59 per cent of valid votes cast". Graphic Online (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
  9. "Nana Addo Dankwa Akufo-Addo". Office of the President, Republic of Ghana. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
  10. Ata, Kofi (11 November 2012). "Why has Nana Akufo Addo omitted Oxford University from his Profile?". Modernghana.com. Archived from the original on 3 November 2016. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
  11. "Prof. Kwaku Asare writes: Nana Akufo-Addo has no law degree but..." manassehazure.com. 5 October 2016. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 31 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானா_அகுபோ-அடோ&oldid=3481223" இலிருந்து மீள்விக்கப்பட்டது