நாத் பாய்
நாத் பாய் | |
---|---|
![]() | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1957–1971 | |
தொகுதி | ராஜாபூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நாத் பாபு பாய் செப்டம்பர் 25, 1922 இந்தியா, வெங்குர்லா |
இறப்பு | 18 சனவரி 1971 | (அகவை 48)
அரசியல் கட்சி | பிரஜா சோசலிச கட்சி |
நாத் பாப்பு பாய் (Nath Bapu Pai) (25 செப்டம்பர் 1922 - 18 சனவரி 1971) [1] என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் பிரஜா சோசலிச கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். [2][3][4][5][6]
இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சக சோசலிசவாதியான கிறிஸ்டலை திருமணம் செய்துகொண்டார். இவர் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த சொற்பொழிவாளராக அறியப்பட்டார். இந்திய மக்களவையில் இவர் மேற்கொண்ட விவாதங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் வ. ரங்காச்சாரி குறிப்பிடுகையில் "இவர் பேசத் தொடங்கினால் மக்களவை முழுவதும் இவர் வசமாகிவிடும். ஆளுங்கட்சியைக் கதிகலங்கவைத்துவிடுவார். ஆங்கிலம், மராத்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லா மொழிகளிலிருந்தும் மேற்கோள்களாக வந்து விழும். பழைய சம்பவங்களை நினைவுகூர்வார். கதைகளைச் சொல்வார். தான் பேசவந்த விஷயத்தைவிட்டு சற்றும் விலகமாட்டார். சட்டபூர்வமாக எதையும் அலசுவார். கேட்போர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கச் செய்துவிடுவார். மிகவும் நாசூக்காகவும் பேச வேண்டியவற்றை அழகாகவும் பேசி, பல இளம் உறுப்பினர்களுக்கு அவர் முன்மாதிரியாக இருந்திருக்கிறார்" [7] என்று குறிப்பிட்டுள்ளார்.
சாதனைகள்[தொகு]
- 1952 ஆம் ஆண்டு பெல்காம் பகுதியிலிருந்து மும்பை மாநில சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டார்.
- இந்தியப் பொதுத் தேர்தல், 1957, [8] இந்தியப் பொதுத் தேர்தல், 1962 [9] மற்றும் இந்தியப் பொதுத் தேர்தல், 1967 ஆகிய தேர்தல்களில் ராஜாபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [10]
- இவர் 1971 சனவரியில் அந்த ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பே இறந்தார். இவரது சோசலிச நண்பரான மது தண்டவதே இவரது ராஜாபூர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
- கொங்கன் இரயில்வே அவரது சிந்தனையில் இருந்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை இரயில் பாதைக்கான கோரிக்கைகளை தொடர்ச்சியாக நாத் பாய் எழுப்பிவந்தார். [11]
- 1954 இல், நாத் பாய் ஆஸ்திரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சோசலிச இளைஞர் பன்னாட்டு ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியரல்லாத முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. [12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Democratic Socialism in India". http://www.democraticsocialism.in/Personae_1.html.
- ↑ "A Paean for Pai – a Pearl in Parliament". http://lohiatoday.com/SocialistMovement/E-NathPai-PearlinParliamnent.pdf. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "Personalities". Maharashtra Navnirman Sena இம் மூலத்தில் இருந்து 17 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140817065604/https://www.manase.org/en/maharashtra.php?mid=68&smid=22&did=4&dsid=14. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "CM wishes to write biographies of 3 former MPs". The Hindu. http://www.hindu.com/2002/07/26/stories/2002072606430400.htm. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "Though the Konkan region is a Sena-BJP citadel, rebels could make a dent, says Meena Menon.". The Hindu. http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2004100301431400.htm&date=2004/10/03/&prd=th&. பார்த்த நாள்: 21 July 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1962: Let truth prevail". The Asian Age. http://www.asianage.com/columnists/1962-let-truth-prevail-167. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ வ.ரங்காசாரி (12 ஏப்ரல் 2019). "நாத் பாய்: பன்மொழி வித்தகர்". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/opinion/columns/article26815094.ece. பார்த்த நாள்: 15 ஏப்ரல் 2019.
- ↑ "India General (2nd Lok Sabha) Election Results – 1957". http://www.elections.in/parliamentary-constituencies/1957-election-results.html. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "India General (3rd Lok Sabha) Election Results – 1962". http://www.elections.in/parliamentary-constituencies/1962-election-results.html. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "India General (4th Lok Sabha) Election Results – 1967". http://www.elections.in/parliamentary-constituencies/1967-election-results.html. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "The Incredible Konkan Railway Story". http://24coaches.com/konkan-railway/. பார்த்த நாள்: 21 July 2014.
- ↑ "THE STRUGGLE FOR IUSY". International Union of Socialist Youth. http://www.iusy.org/who-we-are/history-politics/. பார்த்த நாள்: 21 July 2014.