நாத்திகம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாத்திகம் என்பது பி. இராமசாமி வெளியிட்ட தமிழ் இதழ் ஆகும். இறைமறுப்புக் கருத்துக்களையும், தி.மு.கவுக்கு எதிரான விமர்சனங்களையும் தாங்கி இந்த இதழ் நெடுங்காலம் வெளிவந்தது. இந்த இதழுக்கு எதிராக மு. கருணாநிதி, ம. கோ. இராமச்சந்திரன் உட்பட்டோர் 15 வழக்குகளையும், அரச சமய நிறுவனங்கள் 45 வழக்குகளையும் தொடுத்து ஆசிரியரை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.[1] இந்த வழக்குகளால் ஆசிரியர் சிறைத் தண்டனை, அபராதம் போன்ற தண்டனைகளை அனுபவித்தார்.

வரலாறு[தொகு]

நாத்திகம் என்ற பெயரிட்ட இதழைக் கொண்டுவருவதற்கு அண்ணாத்துரை எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த இதழ் வெளிவந்த போது, "நாத்திகம் மத எதிர்ப்புக் கொள்கை. அது தி.மு.க கொள்கையில்லை" என்று திமுக அறிவித்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 கல்பனாதாசன். (2008). சில தீவர இதழ்கள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாத்திகம்_(இதழ்)&oldid=3846992" இலிருந்து மீள்விக்கப்பட்டது