நாதென்ட்லா மனோகர்
நாதென்ட்லா மனோகர் | |
|---|---|
Nadendla Manohar | |
| குடிமைப் பொருள் வழங்கல், உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 12 சூன் 2024 | |
| ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
| முன்னையவர் | கருமூரி வெங்கட நாகேசுவர ராவ் |
| ஜனசேனா கட்சி தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2018 | |
| முன்னையவர் | புதியது |
| 18வது சபாநாயகர் ஆந்திர சட்டப்பேரவை | |
| பதவியில் 4 சூன் 2011 – 18 சூன் 2014 | |
| முன்னையவர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி |
| பின்னவர் | கொண்டேல சிவ பிரசாத் ராவ் |
| 18ஆவது சபாநாயகர் | |
| பதவியில் 9 சூன் 2009 – 3 சூன் 2011 | |
| முன்னையவர் | ஜி. குத்துலாம்மா |
| பின்னவர் | மல்லு பாட்டி விக்ரமார்கா |
| சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | அன்னாபத்துனி சிவக்குமார் |
| தொகுதி | தெனாலி சட்டமன்றத் தொகுதி |
| பதவியில் 2004–2014 | |
| முன்னையவர் | கோகினெனி உமா |
| பின்னவர் | அலபது இராஜேந்திர பிரசாத் |
| தொகுதி | தெனாலி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 6 ஏப்ரல் 1964 தெனாலி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | ஜனசேனா கட்சி (2018 – present) |
| பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2004 – 2018) |
| துணைவர் | நாதெண்ட்ல மனோகரன் |
| பிள்ளைகள் | மிதுள், லலித் |
| பெற்றோர் | என். பாசுகர ராவ் (தந்தை) |
நாதென்ட்லா மனோகர் (Nadendla Manohar)(பிறப்பு: ஏப்ரல் 6, 1964) ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் குடிமைப் பொருட்கள், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெனாலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் முன்னர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார். தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்பு 2 சூன் 2014 அன்று ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி சபாநாயகராக இருந்தார். நாதென்ட்லா மனோகர் 4 சூன் 2011 அன்று ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் 18ஆவது சபாநாயகராக பதவியேற்றார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 12 அக்டோபர் 2018 அன்று இவர் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார்.[1]
கல்வி
[தொகு]நாதென்லா மனோகர் ஐதராபாத்திலுள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தின் வணிகம் மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகவியல் பட்டதாரி ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]மனோகர் சூன் 2011 இல் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2009 சட்டமன்றத் தேர்தல்களில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தின் தெனாலி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். 2019 சட்டமன்றத் தேர்தல்களில் இவர் போட்டியிட்டு பின்தங்கினார்.
2024 இல், இவர் போட்டியிட்டு தெனாலியிலிருந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, நாதென்லா மனோகர் சிவில் சப்ளைஸ், உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
ஆர்வங்கள்
[தொகு]மனோகர் தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட டென்னிஸ் வீரராக இருந்தார். இவர் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 1986 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nadendla Manohar joins Pawan Kalyan party". 12 October 2018.
- ↑ "Speaker is son of former CM". Archived from the original on 11 October 2012. Retrieved 5 June 2011.
- ↑ "After Cricketeer, now a Tennis player at helm in AP". 5 June 2011.