நாதுராம் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதுராம் சர்மா சங்கர்
பிறப்பு1859 (1859)
ஹார்டுவகஞ்ச், அலிகர், வடமேற்கு மாகாணங்கள், தற்போது உத்தரப் பிரதேசம்), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு21 ஆகத்து 1932(1932-08-21) (அகவை 73)
ஹார்டுவகஞ்ச், அலிகர், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பிள்ளைகள்ஹர் சங்கர் சர்மா
இணையதளம்
jaischauhan.blogspot.in

நாதுராம் சர்மா (Nathuram Sharma) மகாகவி சங்கர் என்ற தனது புனைப் பெயரால் அறியப்படும் (1859-1932) இவர் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் (இப்போது உத்தரப் பிரதேசம் ) ஹார்டுவகஞ்ச், அலிகர் பகுதியைச் சேர்ந்த ஒரு இந்தி மற்றும் உருது கவிஞர் ஆவார். கான்பூரில் நீர்ப்பாசனத் துறையிலும் பின்னர் ஆயுர்வேத மருத்துவராகவும் பணியாற்றினார். இவரது கவிதைப் படைப்புகள் முதன்மையாக பிராஜ் பாஷா மற்றும் கரிபோலியின் பேச்சுவழக்குகளில் உள்ளன.[1] [2][3] இவர் நவீன காலத்தின் எழுத்தாளர் ஆவார். [4] [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1859 இல் பிறந்த சங்கர் தனது ஆரம்பக் கல்வியை உள்ளூர் தொடக்கப்பள்ளியில் பெற்றார்.[6][7] 1874ஆம் ஆண்டில் இவர் நடுத்தர வகுப்பு மாணவராக இருந்தபோது, இ.டி. கான்ஸ்டபிள் என்ற ஆங்கில கல்வி ஆய்வாளர் பள்ளியை ஆய்வு செய்தார். கான்ஸ்டபிள் இவரது திறமை மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்டார். மேலும் ஆய்வு புத்தகத்தில் இவரைப் பற்றி "நாதுராம் ஒரு அறிவார்ந்த மாணவர்; சிறந்த எதிர்காலம் உடையவர்" என்ற கருத்தினையும் தெரிவித்தார். 

சங்கருக்கு சமசுகிருதம் மற்றும் பாரசீக மொழிகளும், இந்தி மற்றும் உருது மொழிகளும் தெரிந்திருந்தன.[8] மகாவீர் பிரசாத் துவேதியின் சரசுவதி என்ற இலக்கிய இதழில் பங்களிப்பாளராக இருந்தார்.[9][10]

கவிதை படைப்புகள்[தொகு]

இவரது கவிதைப் படைப்புகள் பின்வருமாறு: அனுராக் ரத்னா, சங்கர் சரோஜ், கர்ப்ராண்டா ரகசியா, கீதாவளி, கவிதா குஞ்ச், தோகா, சமசியபுர்தியன், விவிட் ராச்நாயன், காளித் காலேவர் மற்றும் சகர் சத்சாய் போன்றவை . ஆர்யா சமாஜ இயக்கத்தின் தாக்கத்தால் இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார். இவர் தனது மொழியின் தேர்ச்சியை இந்த நோக்கத்திற்காகத் திறம்பட பயன்படுத்தினார்.[8] இவர் பெரிய கவிஞர் என்ற பொருள்படும் "மகாகவி" என்று குறிப்பிடப்பட்டார். [6][7]

இறப்பு[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் அலிகார் ஹார்டுவகஞ்சில் 1932 ஆகத்து 21, அன்று சங்கர் இறந்தார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pande, V.R.. The Encyclopaedia Of Indian Literature. சாகித்திய அகாதமி: New Delhi. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA3971. 
  2. [1] Nāthūrāma Śarmā Śaṅkara kī kāvya-sādhanā(1994) : Study of the works of Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet.
  3. [2] Mahākavi Śaṅkara-smr̥ti-grantha(1986):Commemoration volume for Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet; comprises articles on his life and works.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-12. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
  6. 6.0 6.1 6.2 [1] Nāthūrāma Śarmā Śaṅkara kī kāvya-sādhanā(1994) : Study of the works of Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet.
  7. 7.0 7.1 7.2 [2] Mahākavi Śaṅkara-smr̥ti-grantha(1986):Commemoration volume for Nāthūrāmaśaṅkara Śarmā, 1859–1932, Hindi poet; comprises articles on his life and works.
  8. 8.0 8.1 Pande, V.R. (1992). The Encyclopaedia Of Indian Literature. Five. சாகித்திய அகாதமி: New Delhi. பக். 3971. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1221-3. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA3971. 
  9. K. M. George (1992). Modern Indian Literature, an Anthology: Surveys and poems. Sahitya Akademi. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7201-324-0. https://books.google.com/books?id=m1R2Pa3f7r0C&pg=PA149. 
  10. [3]


குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதுராம்_சர்மா&oldid=3588661" இலிருந்து மீள்விக்கப்பட்டது