உள்ளடக்கத்துக்குச் செல்

நாதபிந்து உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதபிந்து உபநிடதம்
உபநிடதத்தின் ஆரம்ப வசனங்கள் ஆன்மாவை ஒரு புலம்பெயர்ந்த பறவையாக உருவகப் படுத்தி விவரிக்கின்றன
தேவநாகரிनादबिन्दू
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புNādabindu
உபநிடத வகையோகக் கலை[1]
தொடர்பான வேதம்அதர்வண வேதம்
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கை20,[2] 56[3]
அடிப்படைத் தத்துவம்யோகக் கலை, வேதாந்தம்

நாதபிந்து உபடதம் (Nadabindu Upanishad) ( சமசுகிருதம் : नादबिन्दु उपनिषत्, ) என்பது ஒரு பண்டைய சமசுகிருத உரையாகும். இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றான [4][5][6] இது நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[7] இது அமிர்தநாதபிந்தோபநிஷத் என்றும் அழைக்கப்படுகிறது. ( சமக்கிருதம்: अमृतनादबिन्दु उपनिषद)[8] இந்த உரை வட இந்திய மற்றும் தென்னிந்திய இரண்டு குறிப்பிடத்தக்க வெவ்வேறு பதிப்புகளில் உள்ளது. இந்த இருக்கு வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.[9][5]

பெயர்க் காரணம்

[தொகு]

நாதம் என்ற சொல், ஒரு வேத சொற்களாக இருப்பதால், கட்டமைப்பற்ற ஒலி அல்லது "அனாகத நாதம்" என்று குறிப்பிடப்படுகிறது. இது வலது காதில் மெல்லிய சலசலக்கும் ஒலியாகக் கூறப்படுகிறது. மேலும் தியானம் செய்யும் நபர் தியானத்தின் "ஆழ்ந்த நிலை"யை எளிதில் அடைகிறார். இந்த ஒலி அனாகத சக்கரத்தில் (வேத சொற்களில் நான்காவது சக்கரம்) அதன் மூலத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. மற்ற மதங்களிலும் "சபாத்", "வார்த்தை" போன்ற இதே சொற்கள் உள்ளன. ஆழ்ந்த தியான நிலையை அடைய அந்த ஒலியை எப்படிக் கேட்பது என்றும் இந்த வேதம் கூறுகிறது.

கால வரிசை

[தொகு]

பண்டைய யோக உபநிடதங்களுடன் உரோமானிய வரலாற்றாலாளர் மிர்சியா எலியாட் என்பவரால் உரையின் தொடர்புடைய காலவரிசை வைக்கப்பட்டுள்ளது. மைத்ராயனிய உபநிடதம், மகாபாரதத்தின் உபதேசமான பகுதிகள், தலைமை சந்நியாச உபநிடதங்கள் மற்றும் பிற ஆரம்பகால யோக உபநிடதங்களான பிரம்மபிந்து, பிரம்மவித்ய உபநிடதம், தேஜோபிந்து உபநிடதம், யோகதத்துவ உபநிடதம், சூரிக உபநிடதம், யோகசிக உபநிடதம், தியானபிந்து உபநிடதம், அமிர்தபிந்து உபநிடதம் போன்ற நூல்கள் இயற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இது இயற்றப்பட்டது என்று அவர் கூறுகிறார். [6] இவையும் நாதபிந்து உரையும், யோக -குண்டலி, வராக மற்றும் பசுபதபிரம்ம உபநிடதங்கள் போன்ற பத்து அல்லது பதினொரு யோக உபநிடதங்களை விட முன்னதாகவே இயற்றப்பட்டவை என்று எலியாட் கூறுகிறார்.[6]

கவின் பிளட் இந்த உரையை மற்ற யோகா உபநிடதங்களுடன் சேர்த்து, கிமு 100 முதல் கிபி 300 வரை இருக்கலாம் என்று தேதியிடுகிறார். [10] கை பெக் இது அநேகமாக கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்திலிருந்ததாகவும், புனித ஒலியின் யோகா பற்றிய ஆரம்பகால ஆவணமாகவும் இருக்கலாம் என்று தேதியிட்டார். [11] ஜார்ஜ் பியூர்ஸ்டீன் இந்த உரை கிபி 1 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். [12] மைக்கேல் பர்லி கூறுகையில், இந்த உரை அத யோகத்தின் நுட்பங்களை வழங்கவில்லை, ஆனால் பிந்தைய அத யோகா நூல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்.[13]

இது நாதபிந்துபநிஷத் (नादबिन्दूपनिषत) என்றும் குறிப்பிடப்படுகிறது.[9][14] 108 உபநிடதங்களின் நவீன சகாப்தத் தொகுப்பில் இராமன் முதல் அனுமன் வரையிலான முக்திகா தொடர் வரிசையில் இது 38வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[15] வட இந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் கோல்ப்ரூக்கின் பதிப்பில், இது 17 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது [16] நாராயண வரிசையில் இந்த உபநிடதத்தை பிப்லியோதிகா இண்டிகாவில் 17 வது இடத்தில் கொண்டுள்ளது.[17] 50 உபநிடதங்களின் பாரசீக மொழிப்பெயர்ப்பையும், சமயத்தைப் பற்றிய சிறந்த நூலாக முன்னுரை வழங்கிய சுல்தான் முகமது தாரா சிக்கோ அவர்களால் "உபனாகத்" என்ற தலைப்பில் 1656 இல் தொகுக்கப்பட்ட உபநிடதங்களின் தொகுப்பில் அன்பரத்நாத் என்று பெயரில் 43வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[18]

உள்ளடக்கம்

[தொகு]

கவிதை வசன நடையில் உரை இயற்றப்பட்டுள்ளது.[19] கையெழுத்துப் பிரதிகளின் இரண்டு பதிப்புகளிலும் உள்ள உரை, ஆன்மாவை ஒரு அம்ச பறவையாக ( வாத்து) உருவகமாக ஒப்பிட்டு, ஓம் சின்னம் மற்றும் முக்குணங்கள் கூறும் சாங்கியக் கோட்பாடு இரண்டையும் ஒப்பிடுகிறது.[2][20] உண்மையான யோகக் கலை தியானம் மற்றும் உலக ஆசைகள் மீதான அனைத்து இணைப்புகளிலிருந்தும் துறப்பதை உள்ளடக்கியது என்று இது வலியுறுத்துகிறது.[20][21]

தருமம் (நெறிமுறைகள்), யோகி வாழ்க்கைக்கு ஒரு தேவை என்று உரை கூறுகிறது. மேலும் பண்டைய இந்திய இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் மூன்றரை மோராக்களுக்குப் பதிலாக பன்னிரண்டு மோராக்களுடன் ஓம் சின்னத்தை விவரிப்பது குறிப்பிடத்தக்கது. [2] [21]

மேலும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Deussen 1997, ப. 567.
  2. 2.0 2.1 2.2 Deussen 1997, ப. 683–686.
  3. Hattangadi 1999.
  4. Deussen 1997, ப. 557, 683.
  5. 5.0 5.1 Aiyar 1914, ப. ix.
  6. 6.0 6.1 6.2 Mircea Eliade (1970), Yoga: Immortality and Freedom, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691017646, pages 128–129
  7. Ayyangar 1938, ப. vii.
  8. Hersey 2013, ப. 155.
  9. 9.0 9.1 Ayyangar 1938, ப. 172.
  10. Flood 1996, ப. 96.
  11. Beck 1995, ப. 93.
  12. Georg Feuerstein (1990), Encyclopedia Dictionary of Yoga, Shambala, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1557782458, page 418
  13. Burley 2000, ப. 31–32.
  14. Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA429, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, page 429
  15. Deussen 1997, ப. 556–557.
  16. Deussen 1997, ப. 561.
  17. Deussen 1997, ப. 562.
  18. Deussen 1997, ப. 558–59.
  19. Deussen 2010, ப. 26.
  20. 20.0 20.1 Ayyangar 1938, ப. 172–180.
  21. 21.0 21.1 Larson & Bhattacharya 2008, ப. 604–605.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதபிந்து_உபநிடதம்&oldid=3847985" இலிருந்து மீள்விக்கப்பட்டது