நாதன் பிராக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதன் பிராக்கன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நாதன் வேட் பிராக்கன்
பட்டப்பெயர்பிராக்ஸ்
உயரம்1.95 m (6 அடி 5 அங்)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலது கை மித விரைவு வீச்சாளர்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 388)4 டிசம்பர் 2003 எ. இந்தியா
கடைசித் தேர்வு16 டிசம்பர் 2005 எ. தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 142)11 சனவரி 2001 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப17 செப்டம்பர் 2009 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்59
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1998–2009நியூசவுத் வேல்ஸ்புளூசு
2008–2010பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே து ஒ நா ப. இ பட்டியல் அ துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 5 116 19 201
ஓட்டங்கள் 70 198 15 373
மட்டையாட்ட சராசரி 17.50 11.64 5.00 9.09
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 37 21* 4* 21*
வீசிய பந்துகள் 1,110 5,759 377 10,105
வீழ்த்தல்கள் 12 174 19 278
பந்துவீச்சு சராசரி 42.08 24.36 23.05 26.39
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 0 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/48 5/47 3/11 5/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 26/– 6/– 37/–
மூலம்: ESPNcricinfo, 19 செப்டம்பர் 2017

நாதன் வேட் பிராக்கன்(Nathan Wade Bracken (பிறப்பு: 12 செப்டம்பர் 1977) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் தூப்பாட்டம், மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார்.இவர் இடதுகை மித -விரைவு வீச்சாளர் ஆவார்.பந்தை இரண்டு விதமான முறைகளில் சுழலச் செய்வதில் இவல் வலலவராகத் திகழ்ந்தார்.இவர் நியூ சவுத்வேல்ஸ் புளூசு மற்றும் சிட்னி கிரேட் அணி மற்றும் இங்கிலாந்தின் கவுண்டி அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்.சனவரி 28, 2011 இல் காலில் காயம் ஏற்பட்டதனால் தனது ஓய்வினை அறிவித்தார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2003 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து போர்டர்-காவஸ்கர் கோப்பையில்  விளையாடியது. டிசம்பர் 4 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார்.கிளென் மக்ரா காயம் காரணமாக  தொடரில் இருந்து விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 26 ஓவர்கள் வீசி 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டி சமனில் முடிந்தது. தனது முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அடிலெய்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இவருக்குப் பதிலாக பிராட் வில்லியம்சை சேர்த்தனர். பின் இறுதி இரண்டு போட்டிகளில் ஆண்ட்ரூ பைகேலுக்கு வாய்ப்பு வழங்கினர். இந்தத் தொடர் சமனில் முடிந்தது. இவர் இந்தத் தொடரில் 6 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 58.50 ஆக இருந்தது.பின் திறமை வாய்ந்த பல பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்ததினால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. சுமார் இரண்டு ஆண்டுகாலம் இவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 2005-06 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்க்கு எதிரான ஃபிரான்க் வோரல் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 16ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் பிறயன் லாரா, சந்தர்பால் ஆகியோரின் இலக்கினையும் கைப்பற்றினார்.

.[1] 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியில் இவர் இடன்பெற்றார். ஆனால் மேற்கு ஆத்திரேலிய துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருநா பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. சனவரி11, 2001 இல் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் இவர் சிறப்பாக செயல்பட்டார்.இருந்தபோதிலும் வலிமையான ஆத்திரேலியப பந்துவீச்சாளர்கள் ஒஅலர் இருந்ததாலும் , இஅருக்கு காயம் ஏற்பட்டதாலும் இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. [2] பின் கில்லெஸ்பி அணியில் இருந்து நீக்கப்ப்பட்டதற்குப் பிறகு இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைத்தது.

References[தொகு]

  1. Australia v West Indies, 1st Test, Brisbane ESPNcricinfo. Retrieved 3 March 2008
  2. "Nathan Bracken". பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: நாதன் பிராக்கன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதன்_பிராக்கன்&oldid=2720305" இலிருந்து மீள்விக்கப்பட்டது