நாணயச் சேகரிப்பு பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்ட் நாணயங்களுக்கான பலகை

நாணயச் சேகரிப்பு பலகை என்பது சேகரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக குறிப்பிட்ட நாணயங்களின் தகவல்களும், அவை இடப்படத் தக்க குழிகளையும் அமைக்கப்பட்ட பலகைகள் ஆகும். இந்த பலகையில் நாணயங்கள் வைக்கும் இடத்திற்கு கீழே நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு, அச்சிடப்பட்ட ஆலையின் குறியீடு, அச்சிடப்பட்ட எண்ணிக்கை அல்லது நாணயத்தின் மதிப்பு ஆகிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நாணயச் சேகரிப்பு பலகைகள் நாணயத்திற்கு ஏற்றவாறு பல்வேறு அளவுகளில் வெளியிடப்படுகின்றன.

நாணயச் சேகரிப்பு பலகை 1934 ஆம் ஆண்டில் ஜோசப் கென்ட் போஸ்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.நாணயச் சேகரிப்பில் அவருடைய ஆர்வம் சேகரிப்பாளர்களின் வேலையை எளிமையாக்க இந்த அமைப்பை கண்டறிய தூண்டுதலாக இருந்துள்ளது. 1935[1] இல் இருந்து 1948[2] வரை இந்த நாணயச் சேகரிப்பு பலகை மிக பிரபலமாக இருந்தது. அதன் பிறகு நாணய சேகரிப்பு கோப்புறைகள் அறிமுகமானது. அதனால் நாணயச் சேகரிப்பு பலகைகள் மதிப்பு குறைந்தன.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.coinbooks.org/esylum_v10n39a05.html
  2. http://www.hausercoin.com/hcstore/general-c-33_46/coin-collecting-boards-30s40s-p-61.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயச்_சேகரிப்பு_பலகை&oldid=3624463" இலிருந்து மீள்விக்கப்பட்டது