உள்ளடக்கத்துக்குச் செல்

நாணயக் கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. சி நாணயக் கடிகாரம், மணிக்கட்டு பட்டைக்கான இணைப்புகளுடன்

நாணயக் கடிகாரம் (Coin watch) அல்லது பதக்கக் கடிகாரம் என்பது நாணயம் அல்லது பதக்கத்தில் இணைக்கப்பட்ட கடிகாரம் ஆகும்.[1]

ஒரு நாணயக் கடிகாரம் பொதுவாக ஒரு நாணயத்தை இரண்டு வட்டுகளாக வெட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது. இதில் ஒரு வட்டு மற்றொன்றை விட மெல்லியதாக இருக்கும்.[1] நாணயத்தின் ஒரு முகத்தை அகற்றுவதன் மூலம். ஒரு கடிகார இயந்திரப் பொறிமுறையானது தடிமனான பகுதியில் உட்பொதிக்கப்படுகிறது. மேலும் இரண்டு முகங்களும் ஒரு மறைக்கப்பட்ட கீல் மற்றும் கொக்கிப் பிடி மூலம் இணைக்கப்படுகின்றன. [1] மூடியவுடன், கடிகாரம் மறைக்கப்பட்டு, கடிகாரம், நாணயம் போலக் காட்சியளிக்கும்.[1]

கோரம் நாணய கடிகாரம்

நாணய கடிகாரங்களின் குறிப்பிடத்தக்கத் தயாரிப்பாளர்களாக கார்டியர்[1][2] மற்றும் கோரம் நிறுவனத்தினர் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Stowe House 1". Antiques Roadshow. BBC. No. 13. அணுகப்பட்டது 2013-03-19.
  2. "A George V 1911 five pound coin watch, by Cartier". Christie's. பார்க்கப்பட்ட நாள் 19 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயக்_கடிகாரம்&oldid=3934864" இலிருந்து மீள்விக்கப்பட்டது