நாட்ரோன் ஏரி
நாட்ரோன் ஏரி | |
---|---|
நாட்ரோன் ஏரியின் செய்மதி படிமம், 6 மார்ச் 2017 | |
அமைவிடம் | வடக்கு தான்சானியா |
ஆள்கூறுகள் | 02°25′S 36°00′E / 2.417°S 36.000°E |
ஏரி வகை | உப்பு நீர் ஏரி |
வடிநில நாடுகள் | தான்சானியா |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 600 மீட்டர்கள் (2,000 அடி)[1] |
அலுவல் பெயர் | Lake Natron Basin |
தெரியப்பட்டது | 4 சூலை 2001 |
உசாவு எண் | 1080[2] |
நாட்ரோன் ஏரி (Lake Natron) ஒரு உப்பு நீர் அல்லது சோடியம் கார்பனேட்டு ஏரியாகும். இது கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டின் வடக்கில் அருஷா பிரதேசத்தில் கென்யாவின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. [3][1]
இந்த ஏரி முழுவதும் சகதியாக உள்ளது. இது 3 மீட்டர் ஆழம் கொண்டது. நீர் வரத்து பொருத்து இதன் அகலம் கூடும் அல்லது குறையும். மழைக்காலத்தில் நாட்ரோன் ஏரி 57 கிலோ மீட்டர் நீளமும், 22 கிலோ மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். [1] இந்த ஏரியின் வெப்ப நிலை 40 °C (104 °F)க்கு அதிகமாக காணப்படுகிறது. [1]
உயர் வெப்ப நிலை காரணமாக இந்த ஏரியின் நீர் ஆவியாகி சோடியம் கார்பனேட் எனும் உப்பு ஏரியில் தங்கு விடுகிறது. இதனால் இந்த ஏரி நீரின் காரத்தன்மை-பிஎச் 12 அளவிற்கு மேல் உள்ளது. இதனால் இந்த ஏரியின் நீரை மக்களும், விலங்களும் குடிக்கும் தன்மை அற்றதாக உள்ளது.
இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் எரிமலைகள் கக்கும் போது செந்நிறம் கொண்ட சோடியம், கார்பனேட்டு மர்ற்றும் சிறிய அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் கொண்ட எரிமலைக் குழம்பு வெளியாகி எரியில் நீரில் கலப்பதால் ஏரி, சகதியுடன், நீர் அடர் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.[4]காரத் தன்மை கொண்ட இந்த ஏரி நீரில் குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டும் வாழ்கிறது.மேலும் சிலவகை பாசிகள் வளர்கிறது. எரிக்கு அவ்வப்போது பூநாரைகள் வலசையின் போது வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Eastern Africa: Northern Tanzania, on the border with Kenya". World Wildlife Fund.
- ↑ "Lake Natron Basin". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ Our Beautiful Planet: Tanzania's crimson 'stone animal' Natron lake
- ↑ "Alkaline Environments", authored by W. D. Grant and B. E. Jones, in Encyclopedia of Microbiology, editor-in-chief Joshua S. Lederberg, Academic Press, 2010, page 129, accessed 24 November 2014
வெளி இணைப்புகள்
[தொகு]- LakeNet Profile
- Think Oink – Save Africa's Flamingos பரணிடப்பட்டது 2013-09-03 at the வந்தவழி இயந்திரம்
- NBC article about Nick Brandt's photos of petrified animals at Natron lake
- "Lake Natron, Tanzania". Earth Observatory Newsroom. Archived from the original on 1 October 2006. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.
- நாட்ரோன் ஏரியின் காணொலி
- ஏரியில் சகதி நீரில் சிக்கி மம்மியான பறவைகள்- காணொளி