உள்ளடக்கத்துக்குச் செல்

நாடோடி மன்னன் (1995 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடோடி மன்னன்
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புஇராஜேஸ்வரி மணிவாசகம்
கதைமணிவாசகம்
தங்கம்(வசனம்)
இசைதேவா
நடிப்புசரத்குமார்
மீனா
ஒளிப்பதிவுதயாளன்
படத்தொகுப்புமோகன்ராஜ்
வெளியீடுஆகத்து 19, 1995 (1995-08-19)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாடோடி மன்னன் (Nadodi Mannan) என்பது 1995ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மணிவாசகம் எழுதி இயக்கியிருந்தார். அவரது மனைவி இராஜேஸ்வரி மணிவாசகம் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்திருந்தார். 19 ஆகஸ்ட் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தது[1][2][3][4]

நடிகர்கள்

[தொகு]

கதைச்சுருக்கம்

[தொகு]

ராமு என்றும் அழைக்கப்படும் ராம் சுந்தர் (சரத் குமார்) ஒரு பணம் படைத்த பெரிய தொழிலதிபர். அவரது மனைவியின் பெயர் மீனாக்ஷி (மீனா). இந்த தம்பதிக்கு ப்ரியா (அதுவும் மீனா தான்) என்ற மகள் இருந்தாள். அவள் வீம்பும் திமிரும் அதிகம் கொண்டவள். படித்த பட்டதாரியான ரமேஷ் (விக்னேஷ்), படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். ப்ரியா மீது காதல் வயப்பட்டு, தான் ஒரு பெரிய பணக்காரன் என்று பொய் சொல்கிறான் ரமேஷ். அதை நம்பி ப்ரியாவும் ரமேஷை காதல் செய்கிறாள். பின்னர், ரமேஷ் சொன்னது பொய் என்று தெரியவந்து ரமேஷை வெறுத்து ஒதுக்குகிறாள். அதனால், ப்ரியாவின் தந்தை ராமு தனக்கு கடந்த காலத்தில் நடந்ததை பற்றி கூறுகிறார்.

கடந்த காலத்தில், ஒரு பெரிய பணக்காரரின் (கிட்டி) மகள் மீனாக்ஷி. ராமு, ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அவனின் நண்பன் பொன்னுசாமி (கவுண்டமணி) ஆவான். அவ்வாறாக ஒரு நாள், ரவுடிகளிடமிருந்து மீனாட்சியை காப்பாற்றுகிறான் ராமு. உடனே, மீனாக்ஷி ராமுவை காதல் செய்கிறாள். பொன்னுசாமியின் உதவியுடன் மீனாக்ஷி, மயில் ஆத்தா என்ற பெயரில் ஏழை போல் நடித்து, ராமுவை தன் வசம் காதல் வயப்பட்ட நாடகமாடுகிறாள். அதனை நம்பி ராமுவும் மீனாட்சி மேல் காதல் கொள்கிறான். அதே சமயம், மீனாட்சியின் தந்தை இந்த காதலை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், தனது பணக்கார வாழ்க்கையை துறந்து, ராமுவை மணம் செய்கிறாள் மீனாக்ஷி. அதன் பின்னர், அயராது உழைத்து, இந்திய அளவில் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இடப்பிடிக்கிறான் ராமு.

நிகழ்காலத்தில், செல்வாக்குள்ள கிருஷ்ணமூர்த்தியிடம் (ரகுவரன்) ராமுவிற்கு மோதல் ஏற்படுகிறது. அதன் பின்னர், ப்ரியா ரமேஷை ஏற்றுகொண்டாளா? மோதலில் ராமு வெற்றிபெற்றாரா? போன்ற கேள்வி விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

[தொகு]

காளிதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கு தேவா இசை அமைத்தார்.[5]

ட்ராக் பாடல் பாடகர் (கள்) காலம்
1 ஹௌசிங் போர்டு மனோ , ஸ்வர்ணலதா 5:11
2 மானா மதுரை மனோ, எஸ். ஜானகி 4:55
3 தென் கிழக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் , கே.எஸ். சித்ரா 5:06
4 திரி அக் கேனி மனோ , ஸ்வர்ணலதா 5:16
5 வாழும் பூமி எஸ்.பி. பாலசுப்ரமணியம் 5:09

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of nadodi mannan". cinesouth.com. Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  2. "Nadodi Mannan (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  3. "Nadodi Mannan". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Tamil Movie News--1995 Review". groups.google.com. 1996-01-09. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  5. "Download Nadodi Mannan by Deva on Nokia Music". music.ovi.com. Archived from the original on 9 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.