நாஞ்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாஞ்சில் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு சங்ககாலத்து ஊர் ஆகும். குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்கள் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும்.

பெயர் விளக்கம்[தொகு]

நாஞ்சில் என்பது நாஞ்சில்(கலப்பை) போல் தோற்றம் தரும் ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு நாஞ்சில்நாடு. அதன் தலைநகரம் நாஞ்சில். (புறம் 137)

நாஞ்சில் வள்ளுவன்[தொகு]

நாஞ்சில் வள்ளுவன் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலத்துக் கொடைவள்ளல். இவனை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் பாராட்டுகிறார். இவனை (ஒருசிறைப் பெரியனார்,ஔவையார், கதப்பிள்ளையார், மருதன் இளநாகனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.

தற்காலப் பெருமக்கள்[தொகு]

தற்காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயரின் முன் “நாஞ்சில்” என்ற அடையாளமொழியை சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. எ.கா. நாஞ்சில் நாடன், நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்&oldid=3749385" இலிருந்து மீள்விக்கப்பட்டது