நாசு ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாசு ஜோசி
பிறப்புஐசியா ஜோசி
திசம்பர் 31, 1984 (1984-12-31) (அகவை 36)
புது தில்லி
உயரம்5 ft 10 in
முடியின் நிறம்பழுப்பு
கண் நிறம்பச்சை
முகமைMIHM
உறவினர்கள்விவேகா பாபாஜி

நாசு ஜோஷி (Naaz Joshi பிறப்பு டிசம்பர் 31, 1984 புதுடெல்லி இந்தியாவில் [1] ) இந்தியாவின் முதல் திருநங்கை சர்வதேச அழகு ராணி, ஒரு மாற்றுப் பாலினத்தவர் உரிமை ஆர்வலர் [2] மற்றும் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆவார்.

ஜோசி தொடர்ச்சியாக மூன்று முறை திருநங்கை உலக அழகிப் போட்டியில் வென்றார். [3] அவர் இந்தியாவின் முதல் திருநங்கை முகப்பு அட்டை வடிவழகி ஆவார். [4] மாறாப் பாலினர் பெண்களுடன் சர்வதேச அழகுப் போட்டியில் வென்ற உலகின் முதல் திருநங்கை இவர் ஆவார். [5] வர் இந்தியாவின் முதல் திருநங்கை வடிவழகி ஆவார். [6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் முஸ்லிம் தாய் மற்றும் இந்து பஞ்சாபி தந்தைக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஐசியா ஜோசி ஆகும். [7] 7 வயதிலேயே, இவரது குடும்பம் இவரது பெண்ணிய நடத்தைக்காக சமூகத்தில் இருந்து வரும் கேலிகளைத் தவிர்ப்பதற்காக மும்பையில் உள்ள ஒரு தொலைதூர உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பியது. அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக நடன மதுக்கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை செய்தார். பின்னர், அவர் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார் மற்றும் ஆடை வடிவமைப்பதில் முறையான படிப்பை முடித்தார். [8]

18 வயதில், நாசு தனது உறவினர், பிரபல மொரிஷிய வடிவழகரான விவேகா பாபாஜியை சந்தித்தார். விவேகாவின் உதவி மற்றும் ஆதரவின் மூலம் தான் நாசு தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றார். [9]

பின்னர் அவர் காசியாபாத்தில் உள்ள மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் வணிக மேலாண்மை பிரிவில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார். [10]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜோஷி தனது பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்திற்காக பாலியல் தொழிலாளியாக வேலை செய்தார். [11] 2018 ஆம் ஆண்டில், குர்கானில் உள்ள ஒரு உணவகத்தில் தனது முன்பதிவு நிராகரிக்கப்பட்டதால், அவர் பாலின பாகுபாட்டால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். உணவகத்தின் இளைய ஊழியரிடம் இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தொடர்பு கொண்ட போதிலும், "பாலின அடிப்படையிலான காரணங்களுக்காக" முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக முதலில் கூறினாலும், பின்னர் "இந்த நிகழ்வில் கூறப்படும் அனைத்து விதமான பாகுபாடு குற்றச்சாட்டுகளும் பொய்யானது" என்று பொது மேலாளரால் மறுக்கப்பட்டது.

நாசு இரண்டு மகள்களின் தாயாக உள்ளார். தங்களது குடும்பத்தினால் நிராகரிக்கப்பட இரு குழந்தைகளை இவர் தத்தெடுத்து உள்ளார்.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், தனது இளைய மகள் தனது 16 வயது தாயால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாகக் கூறினார். [12]

14 ஏப்ரல் 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் தேசிய சட்ட சேவை ஆணையம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டபோது இந்தியாவின் திருநங்கைகளின் நிலை மேம்பட்டது [13] அவர் சர்வதேச குடியரசு அழகியினை 2017 ஆம் ஆண்டிலும் யுனைட்டட் நேஷன் அழகியாகவும் வெற்றி பெற்றார்.

ஐஐஎம் மாணவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரும் விதமாக மிஸ் வேர்ல்டு டைவர்சிட்டி 2019 உடன் நேர்காணல் செய்தனர் [14]

இந்தியாவின் 72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஒரு நேர்காணலின் போது, இவர் நாட்டில் காதல் இலவசம் அல்ல என்றும், இவர் ஒரு பையனுடன் வாழ்ந்து வருவதாகவும், தான் திருநங்கை என்பதால் அவரது திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்தியாவில் திருநங்கைகள் பெரும்பாலும் வெறுப்பிற்கு உள்ளாவதாக இவர் கூறுகிறார். [15]

சான்றுகள்[தொகு]

 1. "Naaz Joshi: From being abandoned to winning Miss Universe Diversity;" (2 September 2020).
 2. Tandon, Rajguru (10 September 2019). "Naaz Joshi,The Trans- Woman Inspiring Change In The Community".
 3. Mathur, Priyanshi (8 August 2019). "making India Proud: Transgender Model Naaz Joshi Wins The Title Of Miss World Diversity 2019".
 4. Maki (23 October 2017). "Transgender cover girl in India".
 5. sharma, shweta (17 August 2019). "Not easy to compete with cis women: Naaz Joshi, India's first transgender to win Miss World Diversity title thrice".
 6. "Story of India's first trans sexual model" (26 June 2021).
 7. "3 Time Miss Diversity Naaz Joshi Wants To Use Her Crown To Work For Her Community." (21 August 2018).
 8. Soni, Preeti (27 August 2018). "Abandoned at 7, raped at 11, India's three-time Miss Diversity, Naaz Joshi, shares the gut wrenching plight of the country's trans community".
 9. Ramesh, Malvika (28 August 2019). "'Trans'-fixed by her beauty".
 10. Monn, Cherrylan (28 August 2018). "Crowning glory".
 11. Norboo, Rinchen (27 August 2018). "India's 1st International Transgender Beauty Queen Once Washed Dishes, Survived Sexual Assault.".
 12. "INTERVIEW | I'm looking for power to voice my opinions: Miss Universe Diversity Naaz Joshi".
 13. Daz, Deepannita (24 February 2019). "Being Aizya Naaz Joshi – From Washing Dishes In A Roadside Dhaba To Winning Miss World Diversity".
 14. "IIM students interact with Miss World Diversity 2019 to promote social inclusion".
 15. "Independence Day 2020: Is India independent to love?".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசு_ஜோசி&oldid=3276071" இருந்து மீள்விக்கப்பட்டது