நாசி முடி
நாசித்துளை முடி அல்லது மூக்கு முடி (Nasal hair) என்பது நாசித்துளையில் உள்ள முடி ஆகும். வயது வந்த மனிதர் மூக்கில் முடிகள் உள்ளன. இவை காற்றில் உள்ள திட மாசுக்களை நாசி குழிக்குள் நுழைவதைத் தடுக்கவும், ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் உதவும் காற்று வடிகட்டியாகச் செயல்படுகின்றன.[1]
செயல்பாடுகள்
[தொகு]2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒவ்வாமை நாசியழற்சி உள்ளவர்களுக்கு நாசி முடியின் அடர்த்தி அதிகரிப்பது ஈழை நோயின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது ஒவ்வாமையூக்கிகளான ஏற்படுத்தும் மகரந்தம் மற்றும் பொதுவான பிற பொருட்களை வடிகட்டும் வகையில் அதிகரித்த பிடிப்பு திறன் உருவாவதன் காரணமாக இருக்கலாம். [2]
அகற்றுதல்
[தொகு]நாசியில் உள்ள முடியை வெட்டுவதற்கு குறு மழிப்பான்கள் மற்றும் மின் மழிப்பான்களுக்கான இணைப்புகள் உட்பட பல சாதனங்கள் விற்கப்பட்டுள்ளன. மின் மழிப்பான்கள் முடியை நாசிப் பாதைக்கு வெளியே தெரியாத அளவுக்கு அவற்றின் நீளத்தைக் குறைக்கின்றன. ஒளிக்கற்றை முடி அகற்றல் மற்றும் மின்னாற்பகுப்பு போன்ற பிற வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Blume-Peytavi, Ulrike; Whiting, David A.; Trüeb, Ralph M. (2008). Hair Growth and Disorders. Berlin: Springer. p. 10. ISBN 978-3540469087.
- ↑ Ozturk, A.B.; Damadoglu, E.; Karakaya, G.; Kalyoncu, A.F. (2011). "Does Nasal Hair (Vibrissae) Density Affect the Risk of Developing Asthma in Patients with Seasonal Rhinitis?". International Archives of Allergy and Immunology 156 (1): 75–80. doi:10.1159/000321912. பப்மெட்:21447962.
