நாசிக்கின் கலாச்சாரம்
| நாசிக்-திரியம்பகேசுவர் கும்ப மேளா | |
|---|---|
நாசிக்கின் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேலா | |
| காலப்பகுதி | ஒவ்வொரு 12 வருடத்திற்கு ஒரு முறை |
| நிகழ்விடம் | கோதாவரி ஆறு |
| அமைவிடம்(கள்) | திரிம்பகம் மற்றும் நாசிக் |
| நாடு | இந்தியா |
| முந்தைய நிகழ்வு | 2015 |
| அடுத்த நிகழ்வு | 2027/2040 |
| பங்கேற்பவர்கள் | அகோரிகள், பக்தர்கள் |
| வலைத்தளம் | |
| kumbhmela2015 | |
நாசிக்கின் கலாச்சாரம் (Culture of Nashik) இந்தியாவின் வடமேற்கு மகாராட்டிராவில் அமைந்துள்ள நாசிக் நகரத்தின் கலாச்சாரம், இந்து சமய வழக்கங்கள் மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]நாசிக்கின் வரலாறு நாசிக், இந்திய மக்களின் மரபுகளையும், இந்துப் பண்பாட்டையும் கொண்டுள்ளது. நாசிக், அசோகரின் வலிமைமிக்க பேரரசின் கீழும் அமைந்திருந்தது. சாதவாகனர் காலத்தில் இது பெரும் புகழ்பெற்றது. 1818 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 19 தேதியன்று நாசிக் ஆங்கிலேயரிடம் சரணடைந்தது.[1]
கொண்டாடப்படும் விழாக்கள்
[தொகு]கும்ப மேளா நாசிக் நகரமானது, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் இந்து சமயத் திருவிழாவான 'நாசிக்-திரியம்பகேசுவர் கும்ப மேளாவின் இருப்பிடமாகத் திகழ்கிறது. மரபுரீதியாகக் கும்ப மேளாக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நான்கு திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். இது 'நாசிக்-திரியம்பக் கும்ப மேளா' அல்லது 'நாசிக் கும்ப மேளா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களிலேயே, நாசிக் கும்ப மேளாவே மிகவும் புனிதமானதாகப் கருதப்படுகின்றது.
மகா குடமுழுக்கு மாங்கி துங்கியில் அமைந்துள்ள, முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் 'அகிம்சைச் சிலை'க்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா குடமுழுக்கு சடங்குகள் நடத்தப்படுகின்றன.[2]
ரத யாத்திரை ரத யாத்திரை என்பது ராமநவமியின் முக்கிய ஒன்றாகும். இதில் கங்கையில் ராமர் மற்றும் அனுமன் சிலைகளை நீராட்டும் நிகழ்வைக் காணலாம். இந்த மங்களகரமான ரத யாத்திரை, ராமர் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பஞ்சவடி வனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலராம் மந்திர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் இரண்டாம் நாள் மிகவும் முக்கியமானதாகும், இதில் பூசாதிகாரி தலைமையில் யமனின் ரதம் புடைசூழ ஒரு நீண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஊர்வலம் முழுவதும், பூசாதிகாரி கைகூப்பி ரதத்தை நோக்கியவாறு நிற்பதுடன், சித்திரை மாதத்தின் முதல் நாளிலிருந்தே விரதமும் மேற்கொள்கிறார். ராமநவமி திருவிழா, பட்டாசுகள் வெடித்தும், கண்கவர் விளக்குகளுடனும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா உலகெங்கிலும் இருந்து மக்களை அதிகளவில் ஈர்க்கிறது.
பிற விழாக்கள் நாசிக் மகர சங்கராந்தி மற்றும் தீபாவளி விழாக்களையும் கொண்டாடப்படுகின்றது
மதம்
[தொகு]நாசிக் நகரம், சமணம், இந்து மற்றும் இசுலாம் ஆகிய மதங்களைச் சார்ந்த பல கோவில்களுக்கும் புனிதத் தலங்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்கிறது. 2016 ஆம் ஆண்டில், பிப்ரவரி மாதம் முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிசபதேவரின் 108 அடி உயரமுள்ள, ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட 'அகிம்சைச் சிலை' மாங்கி துங்கியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது உலகின் மிக உயரமான சமணச் சிலை என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது..[3] இது தற்போது ஒரு முக்கியத் யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது.
நாசிக் நகரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தியாவின் நான்கு கும்பமேளாத் திருவிழாக்களில் ஒன்றான 'நாசிக்-திரியம்பகேஷ்வர் கும்ப மேளா உட்பட, ஏராளமான மத யாத்திரைகளையும் திருவிழாக்களையும் இந்நகரம் நடத்தி வருகின்றது. நாசிக் உட்பட இந்தியாவின் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
நாசிக் நகரம், இங்கு விளையும் செழிப்பான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காகவும் பெயர் பெற்றுள்ளது. நாசிக்கில் விளையும் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விளைச்சல், நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது. நாசிக் மக்கள் தங்கள் கலை, இலக்கியம் மற்றும் உணவுப் பண்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்கள்.[4]
மொழிகள்
[தொகு]நாசிக்கில் பேசப்படும் முதன்மை மொழி மராத்தி ஆகும். இது இந்நகரத்தின் மற்றும் மாநிலத்தின் தாய்மொழியாகும். இது பிராகிருத மொழியிலிருந்து தோன்றியதாகும். இங்குள்ள மக்களால் இந்தி மொழியும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.[5]
கல்வியறிவு விகிதம் 89.95% ஆகும். இதில் 93.40% ஆண்களும், 85.92% பெண்களும் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர்கள்.[6]
மக்கள்தொகை விவரங்கள்
[தொகு]இந்நகரில் இந்துக்கள் பெரும்பான்மையாக இந்ருந்து வருகின்றனர். இருப்பினும், பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் இங்கு வசித்து வருகின்றனர். 2011-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்நகரின் மக்கள் தொகையில் 85.21% இந்துக்கள், 8.90% முஸ்லிம்கள், 3.18% பௌத்தர்கள், 1.10% சமணர்கள், 1.00% கிறிஸ்தவர்கள், 0.39% சீக்கியர்கள், 0.17% பேர் தங்கள் சமயத்தை குறிப்பிடாதவர்கள் மற்றும் 0.05% பேர் பிற சமயங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nashik History". maharashtratourism. Retrieved 9 September 2017.
- ↑ "CM takes aerial view of 108-ft idol". The Times of India. 17 February 2016. https://timesofindia.indiatimes.com/city/nashik/CM-takes-aerial-view-of-108-ft-idol/articleshow/51020562.cms. பார்த்த நாள்: 26 July 2018.
- ↑ "Guinness Book to certify Mangi Tungi idol | Nashik News - Times of India".
- ↑ "Nashik – Nashik City – Nashik Kumbh Mela – Nashik Maharashtra India". Retrieved 11 June 2016.
- ↑ "Marathi and Bhili-Languages Spoken in Nashik". Retrieved 11 June 2016.
- ↑ "Nashik City Population Census 2011-2021 | Maharashtra".
- ↑ "Nashik City Population Census 2011-2021 | Maharashtra".