நாசா வரலாற்று ஆலோசனைக் குழு
நாசா வரலாற்று ஆலோசனைக் குழு (NASA Historical Advisory Committee) என்பது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1964ஆம் ஆண்டு நிறுவிய வரலாற்றாசிரியர்களின் குழுவாகும். நாசாவின் வரலாற்று ஆவணங்கள், நிகழ்வுகள், திட்டங்கள், மற்றும் முக்கியமான ஆராய்ச்சி சாதனைகள் போன்றவற்றை சரியாகப் பதிவுசெய்து, பாதுகாத்து, ஆராய்ச்சிக்காவும் கல்விக்காகவும் பயன்படுத்துவது இக்குழுவின் பணியாகும்.[1]
வரலாறு
[தொகு]நாசா வரலாற்று அலுவலகம் அதன் முதல் தலைமை வரலாற்றாசிரியர் முனைவர் யூகின் எம்மேவின் கீழ் 1960ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் குழு முதலில் பல்வேறு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்கள் ஆரம்பத்தில் புதிய வரலாற்றுத் திட்டத்திற்கு ஆதரவையும் கௌரவத்தையும் தேட முயன்றனர். 1969ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை, இந்தக் குழுவில் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தொழில்முறை வரலாற்றாசிரியர்கள் அதிகளவில் சேர்க்கப்படத் தொடங்கினர். இவர்கள் நாசா வரலாற்றுத் திட்டத்தில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். இதன் விளைவாக, வரலாற்று ஆலோசனைக் குழுவின் அளவு குறைக்கப்பட்டு, நாசா வரலாற்று அலுவலகத்தின் பணிகளை மேற்பார்வையிட பல்கலைக்கழகத்தை தளமாகக் கொண்ட தொழில்முறை வரலாற்றாசிரியர்களை மட்டுமே கொண்டதாக மறுசீரமைக்கப்பட்டது.[2]
தலைவர்கள்
[தொகு]- வூட் கிரே, 1964-1966
- மெல்வின் கிரான்செபெர்க், 1966-1970
- இலூயிசு மார்டன், 1970-
- வால்டர் ரண்டெல்
உறுப்பினர்கள்
[தொகு]- டேனியல் இயே. பூர்சுடின்
- டேவிட் புசுனெல்
- இயேம்சு எல். கேட், 1964
- ஏ.அண்டர் டுப்ரீ
- பி.ஓலி
- தாமசு பி. இயூசு
- எல்டிங் இ. மோரிசன், 1972
- இராபர்ட் பி. முல்தாஃப்
- இராட்மேன் டபிள்யூ. பால்
- இராபர்ட் எல். பெர்ரி
- இயான் பி. ரே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Doarn CR. An historical summary of advisory boards for aerospace medicine at NASA. Aviat Space Environ Med. 2013 Mar;84(3):252-9. doi: 10.3357/asem.3515.2013. PMID: 23513288.
- ↑ "Historical Advisory Committees: NASA and the National Archives". Pacific Historical Review 44 (3): 385-394. 2025-10-12. https://www.jstor.org/stable/3638034.